உண்மை விளக்கம் | Unmai Vilakkam | full |
பாடல் எண் | பாடல் | Verse |
---|---|---|
0 | மன் அதிகை வாழும் மனவாசகம் கடந்தான் மின் அணையார் வாழ்வில் உறா மெய்கண்டான் -- பன்மறையின் வண்மைதரும் ஆகமநூல் வைத்தபொருள் வழுவா உண்மை விளக்கம் செய்தான் உற்று உண்மை விளக்கம் > நூலாசிரியர் சிறப்பு > பாடல்: 0 | |
1 | வண்மைதரும் ஆகமநூல் வைத்த பொருள் வழுவா உண்மைவிளக்கம் உரைசெய்யத் -- திண்மதம்சேர் அந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற்று ஐங்கரனைப் பந்தம் அறப் புந்தியுள் வைப்பாம் உண்மை விளக்கம் > காப்பு > பாடல்: 1 | |
2 | பொய்காட்டிப் பொய் அகற்றிப் போதானந் தப்பொருளாம் மெய்காட்டும் மெய்கண்டாய்! விண்ணப்பம் -- பொய்காட்டா மெய்யா! திருவெண்ணை வித்தகா! சுத்தவினா ஐயாநீ தான் கேட்டு அருள். உண்மை விளக்கம் > நூல் நுவலும் பொருள் > பாடல்: 2 | |
3 | ஆறாறு தத்துவம் ஏது? ஆணவம் ஏது? அன்றே தான் மாறா வினை ஏது? மற்று இவற்றின் -- வேறு ஆகா நான் ஏது? நீ ஏது? நடம் அஞ்செழுத்துத் தான் ஏது? தேசிகனே! சாற்று உண்மை விளக்கம் > நூல் நுவலும் பொருள் > பாடல்: 3 | |
4 | உள்ளபடி இத்தை உரைக்கக்கேள் உந்தனக்கு வள்ளல் அருளால் அன்று வாய்மலர்ந்து -- தெள்ளியசீர் ஆகமங்கள் சொன்ன அடைவிலே ஆனந்த யோகம் நிகழ் புதல்வா! உற்று உண்மை விளக்கம் > நூல் நுவலும் பொருள் > பாடல்: 4 | |
5 | நாற்கோணம் பூமிபுனல் நண்ணும் மதியின்பாதி ஏற்கும் அனல் முக்கோணம் எப்போதும் -- ஆக்கும் அறுகோணம் கால்வட்டம் ஆகாயம் ஆன்மா உறுகாயம் ஆம் இவற்றால் உற்று உண்மை விளக்கம் > ஆன்ம தத்துவம் > பாடல்: 5 | |
6 | பொன்பார் புனல்வெண்மை பொங்கும் அனல்சிவப்பு வன்கால் கருமைவளர் வான்தூமம் -- என்பார் எழுத்து லவரய அப்பாராதிக்கு என்றும் அழுத்தமதாய் நிற்கும் அது. உண்மை விளக்கம் > ஆன்ம தத்துவம் > பாடல்: 6 | |
7 | குறிகுலிசம் கோகனதம் கொள்சுவத்தி குன்றா அறுபுள்ளி ஆர் அமுத விந்துப் -- பிறிவு இன்றி மண்புனல்தீக் கால்வானம் மன்னும் அடைவேஎன்று ஒண்புதல்வா! ஆகமம் ஓதும். உண்மை விளக்கம் > ஆன்ம தத்துவம் > பாடல்: 7 | |
8 | பார் ஆதி ஐந்தும் பன்னும் அதி தெய்வங்கள் ஆர் ஆர் அயன் ஆதி ஐவராம் -- ஓர் ஓர் தொழில் அவர்க்குச் சொல்லுங்கால் தோற்றம் முதல் ஐந்தும் பழுதறவே பண்ணுவர்காண் பார் உண்மை விளக்கம் > ஆன்ம தத்துவம் > பாடல்: 8 | |
9 | படைப்பன் அயன் அளிப்பன் பங்கயக்கண் மாயன் துடைப்பன் உருத்திரனும் சொல்லில் -- திடப்பெறவே என்றும் திரோபவிப்பர் ஈசர் சதாசிவரும் அன்றே அநுக்கிரகர் ஆம். உண்மை விளக்கம் > ஆன்ம தத்துவம் > பாடல்: 9 | |
10 | மண்கடினமாய்த் தரிக்கும் வாரிகுளிர்ந்தே பதம் ஆம் ஒண்கனல் சுட்டு ஒன்றுவிக்கும் ஓவாமல் -- வண்கால் பரந்து சலித்துத் திரட்டும் பார்க்கில் ஆகாயம் நிரந்தரமாய் நிற்கும் நிறைந்து. உண்மை விளக்கம் > ஆன்ம தத்துவம் > பாடல்: 10 | |
11 | உள்ளபடி மாபூதம் ஓதினோம் உன்றனக்குக் கள்ளம்மிகும் ஐம்புலனும் கட்டுரைக்கில் -- மெள்ளவே ஓசை பரிசம் உருவம் சுவைநாற்றம் ஆசைதரும் ஐம்புலனே ஆம் உண்மை விளக்கம் > ஆன்ம தத்துவம் > பாடல்: 11 | |
12 | ஞானேந் திரியங்கள் நன்றாய்க் உரைக்கக்கேள் ஊனம் மிகுபூதம் உற்றிடமா -- ஈனமாம் சத்தாதியை அறியும் தானம் செவிதோல்கண் அத்தாலு மூக்கு என்று அறி. உண்மை விளக்கம் > ஆன்ம தத்துவம் > பாடல்: 12 | |
13 | வானிடமாய் நின்றுசெவி மன்னும் ஒலியதனை ஈனமிகும் தோல்கால் இடமாக -- ஊனப் பரிசம் தனை அறியும் பார்வையில்கண் அங்கி விரவி உருவம் காணுமே. உண்மை விளக்கம் > ஆன்ம தத்துவம் > பாடல்: 13 | |
14 | நன்றாக நீர் இடமாக நாஇரதம் தான் அறியும் பொன்றா மணம்மூக்கும் பூ இடமா -- நின்று அறியும் என்று ஓதும் அன்றே இறை ஆகமம் இதனை வென்றார் சென்றார் இன்ப வீடு. உண்மை விளக்கம் > ஆன்ம தத்துவம் > பாடல்: 14 | |
15 | கண்நுதல் நூல் ஓதியிடும் கன்மேந்திரியங்கள் எண்ணும் வசனாதிக்கு இடமாக -- நண்ணியிடும் வாக்குப் பாதம்பாணி மன்னு குதம் உபத்த மாக்கருதும் நாளும் அது. உண்மை விளக்கம் > ஆன்ம தத்துவம் > பாடல்: 15 | |
16 | வாக்கு ஆகாயம் இடமா வந்து வசனிக்குக்கால் போக்கு ஆரும் காற்று இடமாப் புல்கி அனல் - ஏற்கும் இடும்பை குதம் நீர் இடமா மலாதி விடும்பார் இடம் உபத்தம் விந்து. உண்மை விளக்கம் > ஆன்ம தத்துவம் > பாடல்: 16 | |
17 | அந்தக் கரணம் அடைவே உரைக்ககேள் அந்தமனம் புத்தியுடன் ஆங்காரம் -- சிந்தை இவை பற்றியது நிச்சயித்துப் பல்கால் எழுந்திருந்து அங்கு உற்றது சிந்திக்கும் உணர். உண்மை விளக்கம் > ஆன்ம தத்துவம் > பாடல்: 17 | |
18 | ஓதியிடும் நால் ஆறும் உற்று ஆன்ம தத்துவம் என்று ஆதி அருள்நூல் அறையும்காண் -- தீது அறவே வித்தியா தத்துவங்கள் தம்மை விளம்ப்பக்கேள் உத்தமனே! நன்றாய் உனக்கு. உண்மை விளக்கம் > ஆன்ம தத்துவம் > பாடல்: 18 | |
19 | காலம்நியதி கருதும் கலைவித்தை ஏல இராகம் புருடனே மாயை -- மால் அறவே சொன்னோம் அடைவாகச் சொன்ன இவை தம் உண்மை உன்னி உரைக்க நாம் உற்று உண்மை விளக்கம் > வித்தியா தத்துவம் > பாடல்: 19 | |
20 | எல்லை பலம் புதுமை எப்போதும் நிச்சயித்தல் அல்லல் தரும் கிரியை ஆன்மாவுக்கு -- ஒல்லை அறிவு ஆசை ஐம்புலனும் ஆரவரும் காலம் குறியா மயக்கு என்று கொள். உண்மை விளக்கம் > வித்தியா தத்துவம் > பாடல்: 20 | |
21 | வித்தியா தத்துவங்கள் ஏழும் விளம்பினோம் சுத்தமாம் தத்துவங்கள் சொல்லக்கேள் -- நித்தமாம் சுத்தவித்தை ஈசுரம்பின் சொல்லும் சதாசிவம்நல் சத்திசிவம் காண் அவைகள் தாம். உண்மை விளக்கம் > சிவ தத்துவம் > பாடல்: 21 | |
22 | சுத்தவித்தை ஞானம்மிகும் தொன்மையாம் ஈசுரம்தான் அத்தன் தொழில் அதிகம் ஆக்கிடும் -- ஒத்த இவை சாதாக்கியம் என்றும் சத்தி சிவம் கிரியை ஆதார ஞான உரு ஆம். உண்மை விளக்கம் > சிவ தத்துவம் > பாடல்: 22 | |
23 | ஆறாறு தத்துவமும் சொன்னோம் அடைவாக மாறா மலம் இரண்டும் வாசொல்லக் - கூறில் அறியாமை ஆணவம் நீ ஆன சுகம் துக்கம் குறியா வினை என்று கொள். உண்மை விளக்கம் > ஆணவம், கன்மம் > பாடல்: 23 | |
24 | ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும் மாறா அருளால் வகுத்துரைத்தீர் -- வேறு ஆகா என்னை எனக்கு அறியக் காட்டீர் இவை கண்டேன் உன்னரிய தேசிகரே! உற்று உண்மை விளக்கம் > ஆன்ம ரூபம் > பாடல்: 24 | |
25 | நன்றா உரைக்கக்கேள் நல்ல சித்தின் முன் அசித்து இங்கு ஒன்றாது சித்து அசித்தை ஓராது -- நின்று இவற்றை அன்றே பகுத்து அறிவது ஆன்மாவே என்றுமறை குன்றாமல் ஓதும் குறித்து. உண்மை விளக்கம் > ஆன்ம ரூபம் > பாடல்: 25 | |
26 | தத்துவங்கள் ஆறாறும் தம்மைத்தாம் என்று அறியா எத்தன்மை என்னில் இயம்பக்கேள் -- சுத்தமாம் ஆறு சுவையும் அறியாவே தம்மைத்தாம் கூறில் அவை இவை போல் கொள். உண்மை விளக்கம் > ஆன்ம ரூபம் > பாடல்: 26 | |
27 | ஆறு சுவையும் அருந்தி அவைதம்மை வேறு ஒருவன் கூறியிடும் மேன்மைபோல் - ஆறாறும் ஒன்று ஒன்றாய் நாடி உணர்ந்து ஓதில் அதில் உற்று அறிவாய் நின்ற பொருள் தானேகாண் நீ. உண்மை விளக்கம் > ஆன்ம ரூபம் > பாடல்: 27 | |
28 | குன்றா அருளாலே கூறினீர் என்வடிவு பொன்றாத நும் உருவம் போதியீர் -- நின்று அருக்கன் கண்ணுக்குக் காட்டுமாப் போலே உனது அறிவில் நண்ணி அறிவித்திடுவோம் நாம். உண்மை விளக்கம் > சிவ ரூபம் > பாடல்: 28 | |
29 | அன்றியும்கேள் ஆன்மாவால் ஆய்ந்து அறியும் ஐம்பொறிகள் இன்றி அறியா இவை என்ன -- நின்றதுபோல் ஓவாமல் உன்னை உணர்த்துவோம் உன் அறிவில் மேவாமல் மேவி நாமே. உண்மை விளக்கம் > சிவ ரூபம் > பாடல்: 29 | |
30 | அக்கரங்கட்கு எல்லாம் அகர உயிர் நின்றால்போல் மிக்க உயிர்க்கு உயிராய் மேவினோம் -- எக்கண்ணும் நில்லா இடத்து உயிர்க்கு நில்லாது அறிவு என்று நல் ஆகமம் ஓதும் நாடு. உண்மை விளக்கம் > சிவ ரூபம் > பாடல்: 30 | |
31 | நற்றவத்தோர் தாம்காண நாதாந்தத்து அஞ்சு எழுத்தால் உற்று உருவாய் நின்று ஆடல் உள்ளபடி -- பெற்றிடநான் விண்ணார் பொழில்வெண்ணெய் மெய்கண்ட நாதனே! தண்ணார் அருளாலே சாற்று. உண்மை விளக்கம் > திருவைந்தெழுத்து திருக்கூத்து > பாடல்: 31 | |
32 | எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே நட்டம் புதல்வா நவிலக் கேள் -- சிட்டன் சிவாயநம எனும் திரு எழுத்து அஞ்சாலே அவாயம் அற நின்று ஆடுவான். உண்மை விளக்கம் > திருவைந்தெழுத்து திருக்கூத்து > பாடல்: 32 | |
33 | ஆடும்படி கேள் நல் அம்பலத்தான் ஐயனே நாடும் திருவடியிலே நகரம் -- கூடும் மகரம் உதரம் வளர்தோள் சிகரம் பகரும்முகம் வாமுடியப் பார். உண்மை விளக்கம் > திருவைந்தெழுத்து திருக்கூத்து > பாடல்: 33 | |
34 | சேர்க்கும் துடி சிகரம் சிக்கனவா வீசுகரம் ஆர்க்கும் யகரம் அபயகரம் -- பார்க்கில் இறைக்கு அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார் தங்கும் மகரம் அதுதான். உண்மை விளக்கம் > திருவைந்தெழுத்து திருக்கூத்து > பாடல்: 34 | |
35 | ஓங்காரமே நல் திருவாசி உற்று அதனில் நீங்கா எழுத்தே நிறைசுடராம் -- ஆங்காரம் அற்றார் அறிவர் அணி அம்பலத்தான் ஆடல் இது பெற்றார் பிறப்பு அற்றார் பின். உண்மை விளக்கம் > திருவைந்தெழுத்து திருக்கூத்து > பாடல்: 35 | |
36 | தோற்றம் துடி அதனில் தோயும் திதி அமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் -- ஊற்றமா ஊன்று மலர்ப்பதத்தில் உற்றதிரோதம் முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு. உண்மை விளக்கம் > திருவைந்தெழுத்து திருக்கூத்து > பாடல்: 36 | |
37 | மாயைதனை உதறி வல்வினையைச் சுட்டுமலம் சாய அமுக்கி அருள் தான் எடுத்து -- நேயத்தால் ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல் தான் எந்தையார் பரதம் தான். உண்மை விளக்கம் > திருவைந்தெழுத்து திருக்கூத்து > பாடல்: 37 | |
38 | மோனந்த முனிவர் மும்மலத்தை மோசித்துத் தான் மான் இடத்தே தங்கியிடும் -- ஆனந்தம் மொண்டு அருந்தி நின்று ஆடல் காணும் அருள் மூர்த்தியாக் கொண்ட திரு அம்பலத்தான் கூத்து உண்மை விளக்கம் > திருவைந்தெழுத்து திருக்கூத்து > பாடல்: 38 | |
39 | பரை இடமா நின்று மிகு பஞ்சாக்கரத்தால் உரை உணர்வுக்கு எட்டா ஒருவன் -- வரைமகள்தான் காணும்படியே கருணை உருக்கொண்டு ஆடல் பேணு வார்க்கு உண்டோ பிறப்பு. உண்மை விளக்கம் > திருவைந்தெழுத்து திருக்கூத்து > பாடல்: 39 | |
40 | நாதாந்த நாடகத்தை நன்றாய் அருள்செய்தீர் ஓதீர் எழுத்து அஞ்சும் உள்ளபடி -- தீது அறவே அஞ்சு எழுத்து ஈது ஆகில் அழியும் எழுத்து ஆய்விடுமோ தஞ்ச அருள் குருவே சாற்று. உண்மை விளக்கம் > திருவைந்தெழுத்து ஓதும் முறை > பாடல்: 40 | |
41 | உற்ற குறி அழியும் ஓதும்கால் பாடைகளில் சற்றும் பொருள்தான் சலியாது -- மற்றது கேள் ஈசன் அரூள் ஆவி எழில் ஆர் திரோதமலம் ஆசு இல் எழுத்து அஞ்சின் அடைவு ஆம். உண்மை விளக்கம் > திருவைந்தெழுத்து ஓதும் முறை > பாடல்: 41 | |
42 | சிவன் அருள் ஆவி திரோதமலம் ஐந்தும் அவன் எழுத்து அஞ்சின் அடைவாம் -- இவன்நின்று நம்முதலா ஓதில் அருள் நாடாது நாடும் அருள் சிம்முதலா ஓதுநீ சென்று. உண்மை விளக்கம் > திருவைந்தெழுத்து ஓதும் முறை > பாடல்: 42 | |
43 | அண்ணல் முதலா அழகு ஆர் எழுத்து ஐந்தும் எண்ணில் இராப்பகல் அற்று இன்பத்தே -- நண்ணி அருளானது சிவத்தே ஆக்கும் அணுவை இருளானது தீர இன்று. உண்மை விளக்கம் > திருவைந்தெழுத்து ஓதும் முறை > பாடல்: 43 | |
44 | ஆதிமலம் இரண்டும் ஆதியாய் ஓதினால் சேதியா மும்மலமும் தீர்வு ஆகா -- போதம் மதிப்பு அரிதாம் இன்பத்தே வாழலாம் மாறி விதிப்படி ஓது அஞ்செழுத்துமே. உண்மை விளக்கம் > திருவைந்தெழுத்து ஓதும் முறை > பாடல்: 44 | |
45 | அஞ்சுஎழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும் அஞ்சுஎழுத்தே ஆதிபுராணம் அனைத்தும் -- அஞ்சுஎழுத்தே ஆனந்தத் தாண்டவமும் ஆறாறுக்கு அப்பாலாம் மோனந்த மாமுத்தி யும். உண்மை விளக்கம் > திருவைந்தெழுத்து ஓதும் முறை > பாடல்: 45 | |
46 | முத்திதனை அடைந்தோர் முந்துபழம் போது அங்கி வித்தகமாம் வீணை இவையிற்றின் -- ஒத்த இரதம்மணம் வெம்மை எழில்நாதம் போல விரவுவர் என்று ஓதும் விதி. உண்மை விளக்கம் > அத்துவித முத்தி > பாடல்: 46 | |
47 | தத்துவங்கள் எல்லாம் சகசமாக ஆன்மாவில் பெத்தத்தில் நிற்கின்ற பெற்றிபோல் - முத்திதனில் சித்தமலம் அற்றார் செறிந்திடுவர் என்றுமறை சத்தியமா ஓதியிடும் தான். உண்மை விளக்கம் > அத்துவித முத்தி > பாடல்: 47 | |
48 | ஆதவன் தன் சன்னிதியில் அம்புலியின் ஆர்சோதி பேதம் அற நிற்கின்ற பெற்றிபோல் -- நாதாந்தத்து அண்ணல் துரிவடியில் ஆன்மா அணைந்து இனபக் கண்ணில் அழுந்தியிடும் காண். உண்மை விளக்கம் > அத்துவித முத்தி > பாடல்: 48 | |
49 | சென்று இவன் தான் ஒன்றில் சிவபூரணம் சிதையும் அன்றுஅவன் தான் ஒன்றுமெனில் அன்னியமாம் -- இன்றுஇரண்டும் அற்ற நிலை ஏதுஎன்னில் ஆதித்தன் அந்தன்விழிக் குற்றம் அற நின்றதுபோல் கொள். உண்மை விளக்கம் > அத்துவித முத்தி > பாடல்: 49 | |
50 | வாக்கு மனம் இறந்த வான் கருணையாளன் உருத் தாக்கு அறவே நிற்கும் தனிமுதல்வா! -- நீக்காப் பதியினைப் போல் நித்தம் பசுபாசம் என்றாய் கதியிடத்தும் மூன்றினையும் காட்டு. உண்மை விளக்கம் > அத்துவித முத்தி > பாடல்: 50 | |
51 | முத்திதனில் மூன்று முதலும் மொழியக்கேள் சுத்த அனுபோகத்தைத் தூய்த்தல் அணு -- மெத்தவே இன்பம் கொடுத்தல் இறை இத்தை விளைவித்தல் மலம் அன்புடனே கண்டுகொள், அப்பா! உண்மை விளக்கம் > அத்துவித முத்தி > பாடல்: 51 | |
52 | அப்பா! இம்முத்திக்கு அழியாத காரணம்தான் செப்பாய் அருளாலே செப்பக்கேள் -- ஒப்புஇல் குருலிங்க வேடம் எனக் கூறில் இவை கொண்டார் கரு ஒன்றி நில்லார்கள் காண். உண்மை விளக்கம் > குரு லிங்க சங்கம வழிபாடு > பாடல்: 52 | |
53 | கற்றா மனம்போல் கசிந்துகசிந்தே உருகி உற்று ஆசான் லிங்கம் உயர்வேடம் -- பற்று ஆக முத்தித் தலைவர் முழுமலத்தை மோசிக்கும் பத்திதனில் நின்றிடுவர் பார். உண்மை விளக்கம் > குரு லிங்க சங்கம வழிபாடு > பாடல்: 53 | |
54 | வாழ்ந்தேன் அருட்கடலே! வற்றாப் பவக்கடலில் வீழ்ந்தே அலையாமல் மேதினியில் -- சூழ்ந்துவிடா வெண்ணெய்ச் சுவேதவன மெய்கண்ட நாதனே! உண்மைத் தவப்பயனே உற்று. உண்மை விளக்கம் > குரு லிங்க சங்கம வழிபாடு > பாடல்: 54 |