திருவாசகம் - சிவபுராணம் | Thiruvaasagam - Sivapuranam | full |
பாடல் எண் | பாடல் | Verse |
---|---|---|
0 | ||
1 | நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5 சிவபுராணம் > பாடல்: 1 | Hail, the five letters! Hail, foot of the Lord ! Hail, foot of Him Who not for an instant quits my heart ! Hail, foot of the Guru-pearl that rules in GOgari ! Hail, foot of Him Who becomes, abides, draws near as the Agamam ! Hail, foot of Him, the One, the Not-One, and the King ! (5) |
2 | வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10 சிவபுராணம் > பாடல்: 2 | Victory to the foot of the King, who soothed my soul's unrest and made me His ! Victory to the jewelled foot of Pinnagan, who severs continuity of birth ! Victory to the flower-foot of Him Who is far from those without ! Victory to the anklets of the King, rejoicing 'mid those that fold adoring hands ! Victory to the anklets of the glorious One, who uplifts those that bow the head ! (10) |
3 | ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15 சிவபுராணம் > பாடல்: 3 | Praise to the foot of ICan ! Praise to my Father's foot ! Praise to the foot of the Teacher ! Praise to Civan's roseate foot ! Praise to the foot of the Stainless, who in love stood near ! Praise to the foot of the King, who cuts off delusive birth ! Praise to the foot of glorious Perun-turrai's God ! (15) |
4 | ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20 சிவபுராணம் > பாடல்: 4 | Praise to the Mount, in grace affording pleasures that cloy not ! Because He, Civan, within my thought abides, By His grace alone, bowing before His feet, With joyous thought, Civan's 'Ways of Old' I'll tell, That thus my former 'deeds' may wholly pass. (20) |
5 | கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய், எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25 சிவபுராணம் > பாடல்: 5 | I came, attained the grace the 'Brow-eyed' showed, Adored the beauteous foot by thought unreached. O Thou, Who fill'st the heaven, Who fill'st the earth, art manifested light, Transcending thought, Thou boundless One ! Thy glory great I, man of evil 'deeds' know not the way to praise ! (25) |
6 | புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30 சிவபுராணம் > பாடல்: 6 | Grass was I, shrub was I, worm, tree, Full many a kind of beast, bird, snake, Stone, man, and demon. 'Midst Thy hosts I served. The form of mighty Asuras, ascetics, gods I bore. Within these immobile and mobile forms of life, (30) |
7 | எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35 சிவபுராணம் > பாடல்: 7 | In every species born, weary I've grown, great Lord ! Truly, seeing Thy golden feet this day, I've gained release. O Truth! as the OngAram dwelling in my soul, That I may 'scape. O spotless one ! O Master of the bull ! Lord of the VEdas! Rising, sinking, spreading, subtile One ! (35) |
8 | வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40 சிவபுராணம் > பாடல்: 8 | Thou art the heat ! and Thou the cold ! the Master Thou, O spotless One ! Thou cam'st in grace, that all things false might flee, True Wisdom, gleaming bright in splendour true, To me, void of all wisdom, blissful Lord ! O Wisdom fair, causing unwisdom' self to flee far off ! (40) |
9 | ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45 சிவபுராணம் > பாடல்: 9 | Thou know'st no increase, measure, end ! All worlds Thou dost create, protect, destroy, enrich with grace, Release. Thou causest me to enter 'mid Thy servant band. More subtile Thou than fragrance. Thou'art afar, art near. Thou art the Mystic word, transcending word and thought. (45) |
10 | கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50 சிவபுராணம் > பாடல்: 10 | As when are mingled milk, sweet juice of cane and butter, Thou dost distil, like honey, in the thought of glorious devotees, And cuttest off the continuity of births - our mighty One ! Thou hast the colours five ! While heavenly ones extolled Thou didst lie hid, our mighty Lord ! In the strong grasp of deeds, (50) |
11 | மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55 சிவபுராணம் > பாடல்: 11 | I lay, hidden amid illusion's shrouding gloom. Thou binding with rare cords of virtue and of sin, Didst clothe with outer skin, enveloping with worms and filth, - Within my nine-gated dwelling foul bewildered, By the five senses sore deceived, - (55) |
12 | விலங்கு மனத்தால், விமலா உனக்கு கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60 சிவபுராணம் > பாடல்: 12 | To me, mean as I was, with no good thing, Thou didst grant grace, That I, with mind erewhile embruted, - pure one ! - should Become commingling love, in soul-subduing rapture melt ! Thou cam'st in grace on this same earth, didst show Thy mighty feet To me who lay mere slave, - meaner than any dog, - (60) |
13 | தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65 சிவபுராணம் > பாடல்: 13 | Essential grace more precious than a mother's love ! Spotless splendour ! Brightness of full-blown flower ! O Teacher ! Honied ambrosia ! Lord of Civa-town ! O venerated One, Guardian, Looser of PAcam's tie, Working in grace of love, that in my mind delultion may die out ! (65) |
14 | பேராது நின்ற பெருங்கருணைப் போராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70 சிவபுராணம் > பாடல்: 14 | Great river of exceeding tenderness, with ceaseless flow ! Ambrosia that satiates not ! Infinite, almighty Lord ! Light unseen that lurks within the souls that sought Thee not ! Thou Who abidest in my soul, till melting waters flow ! Thou Who art without pleasure or pain, Who yet hast both ! (70) |
15 | அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75 சிவபுராணம் > பாடல்: 15 | Loving to loving ones ! Effulgent One, Who all things art, And their negation too ! Great Master, whom no darkness gathers round ! First One, Thou'rt End and Midst, and art devoid of these ! Father, Lord, Who drew'st, and mad'st me Thine ! Eye of the minds that see by keenest glance of wisdom true, (75) |
16 | நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80 சிவபுராணம் > பாடல்: 16 | Hard to be eyed ! Subtle understanding, none can scrutinize ! Holy ! Who comest not, nor goest, nor mingling liv'st ! Guardian who guardest us ! Great Light whom none can see ! Flood of delight ! Father ! Light of all passing splendours That appear ! Unutterably subtle Intellect ! (80) |
17 | மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85 சிவபுராணம் > பாடல்: 17 | Of all that in this world diverse pronounced as truth Is known, Thou art the knowledge sure ! Full certitude ! Precious ambrosia, fountain welling up within ! My Owner Thou ! I can't endure, our Guru, in this changing straitened frame to 'bide. Aran! All Thy saints made true invoke Thee, (85) |
18 | போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90 சிவபுராணம் > பாடல்: 18 | Worshipping abide, and praising Thee, from falsehood freed, Hither return no more ! That deeds and birth cling not, To sever bonds of this deceitful sensuous frame the might is Thine ! Lord who dost dance, trampling dense darkness down ! Dancer in Thillai ! Dweller in the Southern PAndi land ! (90) |
19 | அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95 சிவபுராணம் > பாடல்: 19 | Thou Who dost cut off evil birth ! - Adoring ever, Thee they name, Whom words declare not; then 'NEATH THY SACRED FEET THEY LEARN THE MEANING OF THEIR SONG. The blessed ones In Civan's town who dwell, - full many a one, - beneath The feet of Civan, lowly bending utter praise. (95) |