தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu | full |
பாடல் எண் | பாடல் | Verse |
---|---|---|
0 | ||
1 | எழுதி, சரி பார்த்து, கற்று, கண்டு, அதன் படி நிற்றல் எழுதரிது முன்னம் எழுதிய பின்னத்தைப் பழுதற வாசிப்பரிது பண்பா- முழுதுமதைக் கற்பரிது நற்பயனைக் காண்பரிது கண்டக்கால் நிற்பரிது தானந் நிலை. தனிப்பாடல் திரட்டு > கற்றல் > பாடல்: 1 | |
2 | பல பசுக்கள் கொண்ட ஒரு தொழுவினில் ஒரு கன்றானது எப்படி தன் தாயைக் கண்டு அணுகுமோ, அதுபோல நம் வினை! பாரில்இன்ப துன்பம் படரவிதித் தானே வாரிசத்தான்! யாது கவி வல்லவா? - ஓர்தொழுவில் பல்ஆவுள் கன்றுதன்தாய் பார்த்து அணுகல் போல்புவியில் எல்லாரும் செய்வினை யாலே. சதாவதானம் சரவணப்பெருமாட் கவிராயர் தனிப்பாடல் திரட்டு > வினை > பாடல்: 2 | |
3 | நீதி தவறாத ஓர் மன்னன் ஊரில் உள்ள பெண்களின் நகை(ப்பு) எத்தகையது தூது மதுரை துவரை கடையிடைமுன் ஓதுகின்ற மூஎழுத்து ஒக்குமே- நீதி செகராச சேகரன்வாழ் சிங்கையெனுஞ் செல்வ நகர்ஆ யிழையார் நகை. தனிப்பாடல் திரட்டு > நகை > பாடல்: 3 | |
4 | கலிகாலத்தில் ஆற்றல் வாய்ந்தவர் யார்? அண்டின பேரைக் கெடுப்போரும் ஒன்றுபத் தாய்முடிந்து குண்டணி சொல்லும் குடோரிகளும் கொலையே நிதம்செய் வண்டரைச் சேர்த்து இன்ப சல்லாபம் பேசும்மறையவரும் சண்டிப் பயல்களுமே கலிகாலத்தில் தாட்டிகரே! முத்துச் சுப்பையர் தனிப்பாடல் திரட்டு > கலிகால ஆற்றல் > பாடல்: 4 | |
5 | பகட்டு! விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும் விரல்நிரைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனில் பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை நஞ்சேனும் வேம்பேனும் நன்று. ஔவையார் தனிப்பாடல் திரட்டு > பகட்டு! > பாடல்: 5 | |
6 | யாருக்கு எது எளிது? வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான் தேன்சிலம்பி யாவருக்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும் வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண் எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது. ஔவையார் தனிப்பாடல் திரட்டு > எளிது > பாடல்: 6 | |
7 | எதுவும் பழக்கமே! சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம் நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம். ஔவையார் தனிப்பாடல் திரட்டு > பழக்கம் > பாடல்: 7 | |
8 | கற்றதனால் ஆய பயனென்? காணாமல் வேணதெல்லாம் கத்தலாம் கற்றோர் முன் கோணாமல் வாய்திறக்கக் கூடாதே - நாணாமல் பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தாக்கால் கீச்சுக்கீச் சென்னும் கிளி. ஔவையார் தனிப்பாடல் திரட்டு > கற்றோர் முன் கவனம் தேவை > பாடல்: 8 | |
9 | அழகு எதில்? சுரதந் தனில் இளைத்த தோகை ; சுகிர்த விரதந் தனில் இளைத்த மேனி; - நிரதம் கொடுத்திளைத்த தாதா; கொடுஞ்சமரிற் பட்ட வடுத்துளைத்த கல் அபிரா மம். ஔவையார் தனிப்பாடல் திரட்டு > அழகு > பாடல்: 9 | |
10 | அன்பில்லாள் இட்ட அமுது. காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே மாணொக்க வாய்திறக்க மாட்டாதே - வீணுக்கென் என்பெல்லாம் பற்றி எரிகின்ற தையையோ அன்பில்லாள் இட்ட அமுது. ஔவையார் தனிப்பாடல் திரட்டு > அன்பிலாமை > பாடல்: 10 | |
11 | சந்நியாசம் கொள்வது எப்போது? பத்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால் எத்தாலுங் கூடி இருக்கலாம் - சற்றேனும் ஏறுமா றாக இருப்பாளே யாமாகிற் கூறாமற் சந்நியாசம் கொள். ஔவையார் தனிப்பாடல் திரட்டு > சந்நியாசம் > பாடல்: 11 | |
12 | அமுது வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய் நெய்தான் அளாவி நிறம்பசந்து - பொய்யா அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார் கடகஞ் செறியாதோ கைக்கு. ஔவையார் தனிப்பாடல் திரட்டு > அமுது > பாடல்: 12 | |
13 | பொன்மாரி பெய்க கருணையால் இந்தக் கடலுலகம் காக்கும் வருணனே மாமலையன் கோவற் - பெருமணத்து முன்மாரி பெய்யும் முதுவாரியை மாற்றிப் பொன்மாரி யாகப் பொழி. ஔவையார் தனிப்பாடல் திரட்டு > பாரி மகளிர் > பாடல்: 13 | |
14 | நன்று எது? ஏசி யிடலின் இடாமையே நன்றெதிரில் பேசும் மனையாளில் பேய்நன்று - நேசமிலா வங்கணத்தின் நன்று வலிய பகை வாழ்விலாச் சங்கடத்தில் சாதலே நன்று. ஔவையார் தனிப்பாடல் திரட்டு > நன்று > பாடல்: 14 | |
15 | நல்லான் யார்? காலையி லொன்றாவர் கடும்பகலி லொன்றாவர் மாலையி லொன்றாவர் மனிதரெலாம் - சாலவே முல்லானைப் போல முகமுமக மும்மலர்ந்த நல்லானைக் கண்டறியோம் நாம். ஔவையார் தனிப்பாடல் திரட்டு > நல்லான் > பாடல்: 15 | |
16 | எறும்புந்தன் கையாலெண் சாண். கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென் றுற்ற கலைமடந்தை ஓதுகிறாள் - மெத்த வெறும்பந் தயங்கூற வேண்டாம் புலவீர் எறும்புந்தன் கையாலெண் சாண். ஔவையார் தனிப்பாடல் திரட்டு > செருக்கு > பாடல்: 16 | |
17 | திருமகளினும் அழகியிவள் மைவடிவக் குழலியர்தம் வதனத்தை நிகர்ஒவ்வா மதியே!மானே! செய்வடிவைச், சிற்றிடையைத், திருநகையை, வேய்த்தோளைத் தெய்வமாக இவ்வடிவைப் படைத்தவடிவு எவ்வடிவோ? யான்அறியேன்! உண்மையாகக் கைபடியத் திருமகளைப் படைத்து,இவளைப் படைத்தனன்நல் கமலத்தோனே! அம்பிகாபதி தனிப்பாடல் திரட்டு > கலை, காதல் > பாடல்: 17 | |
18 | இறை எங்கு உள்ளது? வெண்ணெயுற்று நெய்தேட வேண்டுமோ? தீபமுற்று நண்ணு கனல்தேடல் நன்றாமோ? - எண்மனத்தை நாடிச் சிவனிருக்க, நாடாமல் ஊர்தோறும் தேடித் திரிவதுஎன்ன செப்பு? அருணாசலக் கவிராயர் தனிப்பாடல் திரட்டு > உள்ளம் பெரும் கோயில் > பாடல்: 18 | |
19 | நல்லோரும் தீயோரும் நல்லவர்கள் வாயால் நவிலுமொழி பொய்யாமல், இல்லை'யெனாது உள்ளமட்டும் ஈவார்கள் - நல்லகுணம் அல்லவர்கள் 'போ,வா'என்று ஆசைசொல்லி நாள்கழித்தே இல்லை'என்பார் இப்பாரி லே. அருணாசலக் கவிராயர் தனிப்பாடல் திரட்டு > நல்லோரும் தீயோரும் > பாடல்: 19 | |
20 | சிவனுக்கும் தேங்காய்க்கும் சிலேடை கல்லால் அடியுறலால், கண்மூன்று இருப்பதனால், எல்லோரும் பூசைக்கு எடுத்திடலால், - வல்லோடு கொள்ளுகையால், கங்கா குலமுத்து சாமிமன்னா! கள்இதழி யான்நிகர் தேங்காய். அழகிய சொக்கநாத பிள்ளை தனிப்பாடல் திரட்டு > சிலேடை > பாடல்: 20 | |
21 | எதெல்லாம் கோடி பெறும்? மதியார் முற்றம் மதித்துஒருகால் சென்று மிதியாமை கோடி பெறும். உண்ணீர்!உண்ணீர்' என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும் கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும். கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக் கோடாமை கோடி பெறும். ஔவையார் தனிப்பாடல் திரட்டு > சிறந்த செயல்கள் > பாடல்: 21 | |
22 | யாரை எங்கே புகழ வேண்டும் நேசனைக்கா னாவிடத்தில் நெஞ்சார வேதுதித்தல்; ஆசானை எவ்விடத்தும் அப்படியேதுத்தல்; - வாச மனையாளைப் பஞ்சணையில்; மைந்தர்தமை நெஞ்சில்; வினையாளை வேலை முடிவில். ஔவையார் தனிப்பாடல் திரட்டு > புகழ் > பாடல்: 22 | |
23 | எவையோடு எவை போம்? தாயோடு அறுசுவைபோம்; தந்தையோடு கல்விபோம்; சேயோடு தான்பெற்ற செல்வம்போம்; - ஆயவாழ்வு உற்றார் உடன்போம்; உடன்பிறப்பால் தோள்வலிபோம் பொற்றாலி யோடுஎவையும் போம். ஔவையார் தனிப்பாடல் திரட்டு > துவரை > பாடல்: 23 | |
24 | யானையைப் பூனை உண்ணுமோ? ஆனெய்தனைப் பூனை அருந்தினதும் அல்லாமல் பூனெய்தனை ஈயெடுத்துப் போனதுவும் - மான்அனைய, கண்ணார் தலையதனில் காய்காய்த்து அறுத்ததுவும் நண்ணாய் அறிந்து சொல். இராம கவிராயர் தனிப்பாடல் திரட்டு > விடுகவி > பாடல்: 24 | |
25 | கயவர்களைப் பாடி இளைக்கின்றேன்! வணக்கம்வரும் சிலநேரம், குமரகண்ட வலிப்புவரும் சிலநேரம், வலியச்செய்யக் கணக்குவரும் சிலநேரம், வேட்டைநாய்போல் கடிக்கவரும் சிலநேரம், கயவர்க்கெல்லாம் இணக்கம்வரும் படிதமிழைப் பாடிப்பாடி எத்தனைநாள் திரிந்துதிரிந்து இளைப்பேனையா! குணக்கடலே! அருள்கடலே! அசுரரான குரைக்கடலை வென்றபரங் குன்றுளானே! இராமச்சந்திர கவிராயர் தனிப்பாடல் திரட்டு > சித்திர கவி > பாடல்: 25 | |
26 | தன் குற்றம் கல்லாத ஒருவனைநான் கற்றாய் என்றேன்; காடுஎறியு மறவனைநாடு ஆள்வாய் என்றேன். பொல்லாத ஒருவனைநான் நல்லாய் என்றேன்; போர்முகத்தை அறியானைப் புலியே என்றேன்; மல்லாரும் புயம் என்றேன் சூம்பல்தோளை; வழங்காத கையனைநான் வள்ளல் என்றேன்; இல்லாது சொன்னேனுக்கு 'இல்லை'என்றான்; யானும் எந்தன் குற்றத்தால் ஏகின்றேனே! இராமச்சந்திர கவிராயர் தனிப்பாடல் திரட்டு > சித்திர கவி > பாடல்: 26 | |
27 | நாயும் தேங்காயும் ஓடும் இருக்கும்; அதன்உள்வாய் வெளுத்து இருக்கும்! நாடும்; குலைதனக்கு நாணாது - சேடியே! தீங்கானது இல்லாத் திருமலைரா யன்வரையில் தேங்காயும் நாயும்எனச் செப்பு. காளமேகம் தனிப்பாடல் திரட்டு > சிலேடை > பாடல்: 27 | |
28 | இத்தனை கால் பிராணிகள் கண்டது உண்டு, கேட்டது இல்லை பூநக்கி ஆறுகால்; புள்ளினத்துக்கு ஒன்பதுகால்; ஆனைக்குக் கால்பதினேழு ஆனதே! - மானேகேள்! முண்டகத் தின்மீது முழுநீலம் பூத்ததுஉண்டு; கண்டதுஉண்டு, கேட்டதுஇல்லை காண்! காளமேகம் தனிப்பாடல் திரட்டு > சிலேடை > பாடல்: 28 | |
29 | பதினாறு செல்வங்கள் துதி, வாணி, வீரம், விசயம், சந்தானம், துணிவு, தனம், அதிதானியம், சௌபாக்கியம், போகம், அறிவு, அழகு, புதிதாம்பெருமை, அறம்குலம், நோய்இன்மை, பூண், வயது பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே! காளமேகம் தனிப்பாடல் திரட்டு > செல்வம் > பாடல்: 29 | |
30 | ஏர் ஓட்டும் காட்சி பத்துக்கால், மூன்றுதலை, பார்க்கும்கண் ஆறு, முகம் இத்தரையில் ஆறு, வாய் ஈரிரண்டாம் - இத்தனையும் ஓரிடத்தில் கண்டேன்; உகந்தேன்; களிகூர்ந்தேன்; பாரிடத்தில் கண்டே பகர்! சுந்தர கவிராயர் தனிப்பாடல் திரட்டு > விடுகவி > பாடல்: 30 | |
31 | நமக்கு யார் துணை? துயிலையி லே,இடர் துன்னையி லேதெவ்வர் சூழையிலே, பயிலையி லே,இருள் பாதியி லேபசும் பாலனத்தை அயிலையி லே,வயது ஆகையி லேநமக்கு யார்துணை தான்? மயிலையி லே,வளர் சிங்காரவேலர் மயிலையிலே. சொக்கநாதப் புலவர் தனிப்பாடல் திரட்டு > துணை > பாடல்: 31 | |
32 | பெருங்காயம் தேடேன் வெங்காயம் சுக்கானால், வெந்தயத்தால் ஆவதென்ன? இங்கார் சுமந்துஇருப்பார் இச்சரக்கை - மங்காத சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம் ஏரகத்துச் செட்டி யாரே! சொக்கநாதப் புலவர் தனிப்பாடல் திரட்டு > விடுகவி > பாடல்: 32 | |
33 | படிக்காசுப் புலவரைப் புகழ்ந்து பாடியது மட்டாரும் தென்களந்தைப் படிக்காசன் உரைத்தமிழ் வரைந்த ஏட்டைப் பட்டாலே சூழ்ந்தாலும், மூவுலகும் பரிமளிக்கும்; பரிந்துஅவ் ஏட்டைத் தொட்டாலும் கைம்மணக்கும்; சொன்னாலும் வாய்மணக்கும்; துய்யசேற்றில் நட்டாலும் தமிழ்ப் பயிராய் விளைந்திடுமே! பாட்டிலுறு நளினம்தானே! பலபட்டை சொக்கநாதப் புலவர் தனிப்பாடல் திரட்டு > புகழ்ச்சி > பாடல்: 33 | |
34 | பிறவிப் பெருங்கடல் நீந்துவது அறியேனே! உரையேன் உன்பேரை; உணரேன்நின் சீரை; உனைக் கருதிக் கரையேன்; எவ்வாறு கடப்பேன்? வினையைக் கடந்தகுண வரையே! அருள்பெரு வாரிதியே! மதுரா புரிக்குத் துரையே! அழகிய சொக்கே! தமிழ்தந்த சுந்தரமே! பலபட்டை சொக்கநாதப் புலவர் தனிப்பாடல் திரட்டு > பிறவி, பிணி, வினை > பாடல்: 34 | |
35 | இவரை எப்படிப் பாடுவேன்! கல்லடிக்கும் உளியிரண்டு காதடிக்குள் அடிப்பதெனக், கவிதை கேட்டுப் பல்லடிக்குக் கிடுகிடெனப் பறையடிக்கும் நெஞ்சர்தமைப் பாடுவேனோ? வில்லடிக்கும், பிரம்படிக்கும், கல்லடிக்கும், விரும்பிநின்ற மெய்யன்ஈன்ற செல்லடிக்கும் தடவரையில் சேறடிக்க அலையடிக்கும் செந்திலானே! படிக்காசுத் தம்பிரான் தனிப்பாடல் திரட்டு > ஈயார் > பாடல்: 35 | |
36 | சனியான தமிழ்? அட கெடுவாய் பலதொழிலும் இருக்கக் கல்வி, அதிகமென்றே கற்றுவிட்டோம் அறிவில்லாமல் திடமுள மோகனமாடக் கழைக்கூத்தாடச், செப்பிடு வித்தைகளாடத் தெரிந்தோமில்லைத் தடமுலை வேசையராகப் பிறந்தோ மில்லைச், சனியான தமிழைவிட்டுத் தையலார்தம் இடமிருந்து தூதுசென்று பிழைத்தோ மில்லை, என்ன சென்மமெடுத் துலகில் இரக்கின்றோமே. பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் தனிப்பாடல் திரட்டு > சனியான தமிழ்? > பாடல்: 36 | |
37 | வள்ளல் சீதக் காதி ஈயாத புல்ல ரிருந்தென்ன போயென்ன வெட்டிமரம் காயா திருந்தென்ன காய்த்துப் பலனென்ன கைவிரித்துப் போயா சகமென் றுரைப்போர்க்குச் செம்பொன் பிடிபிடியாய் ஓயாம லீபவன் வேள்சீ தக் காதி யொருவனுமே. பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் தனிப்பாடல் திரட்டு > வள்ளல் > பாடல்: 37 | |
38 | ஆகுங்காலத்து போகுங்காலத்து செல்வ நிலை! ஆங்காலம் மெய்வருந்த வேண்டாம் அஃதேதென்னில் தேங்காய்க் கிளநீர்போற் சேருமே - போங்காலம் காட்டானை யுண்ட கனியதுபோல் ஆகுமே தாட்டாளன் தேடும் தனம். ஔவையார் தனிப்பாடல் திரட்டு > வினை, செல்வம், தனம் > பாடல்: 38 |