அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa | full |
பாடல் எண் | பாடல் | Verse |
---|---|---|
0 | மன்னுதிரு அண்ணா மலைமாலை நாயடியேன் பன்னுதமிழ் வெண்பாவில் பாடவே - துன்னுமலர்ப் பாதனே மூடிகத்தின் பாலேறும் தேவகண நாதனே நீமுன் நட அண்ணாமலை வெண்பா > காப்பு > பாடல்: 0 | |
1 | ஆதிநடம் ஆடுமலை அன்றிருவர் தேடுமலை சோதிமதி ஆடரவம் சூடுமலை - நீதி தழைக்குமலை ஞானத் தபோதனரை வாஎன்று அழைக்குமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 1 | |
2 | அன்பர் பிறப்பை அகற்றுமலை அன்பரல்லா வன்பர் பிறப்பை வளர்க்குமலை - அன்பை வடிக்குமலை சிங்கத்தை வந்துசிம்புள் ஆகி அடிக்குமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 2 | |
3 | கூற்றை உதைத்தமலை கோமாறன் கூடல்வைகை ஆற்றை அடைத்தமலை ஆரூரன் - போற்றச் சிறந்தமலை தீவினையேன் செய்தகுறை எல்லாம் மறந்தமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 3 | |
4 | ஏழைக்கு இரங்குமலை ஏதேது கேட்டாலும் கோழைப் படாமல் கொடுக்குமலை - வேழம் உரித்தமலை அம்மைக்கு ஒருபாகம் ஈந்த மருந்துமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 4 | |
5 | கண்டம் கரியமலை கண்மூன்று உடையமலை அண்டரெல்லாம் போற்றற்கு அரியமலை - தொண்டருக்குத் தோற்றுமலை நாளும் தொழுவோர் ஏழுபிறப்பை மாற்றுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 5 | |
6 | அன்னமுடன் சொன்னம் அளிக்குமலை ஆதரிப்போர் உன்னுவரம் எல்லாம் உதவுமலை - துன்னுபுகழ் கொண்டமலை அங்கிக் கொழுந்தாகி அண்டமுற மண்டுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 6 | |
7 | மாமா தவநமச்சி வாயன் தினமொருவெண் பாமாலை சாத்திப் பணியுமலை - காமாதி என்னுமலை தான்கடந்தோர் இன்பத் திருஉளத்தே மன்னுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 7 | |
8 | அஞ்சுஅக் கரமாய் அமர்ந்தமலை ஆதரிப்போர் வஞ்சக் கருவினையை மாற்றுமலை - நெஞ்சைத் திருத்துமலை மெய்ஞ்ஞான சித்திதரும் தெய்வ மருத்துமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 8 | |
9 | தொண்டர் வலமாகச் சூழுமலை சூழுமவர் பண்டைவினை எல்லாம் பறிக்குமலை - அண்டம் உருவுமலை எந்தைகுரு ஓம்நமச்சி வாயன் மருவுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 9 | |
10 | கொம்பனைய பேதைக் குறமகளிர் வானிலுறும் அம்புலியி னோடுவிளை யாடுமலை - செம்பவளம் ஒத்தமலை சற்குருவாய் ஒண்கழலென் சென்னியின்மேல் வைத்தமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 10 | |
11 | ஞானகுரு நாதன் நமச்சிவா யன்கருணை ஆனபரன் ஆகிஎனை ஆண்டமலை - வானவர்கள் போற்றுமலை தீவினையேன் புந்திக்க வலைஎல்லாம். (புந்திக் கவலைஎல்லாம்) மாற்றுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 11 | |
12 | சரண கமலம் தனைப்புகழும் தொண்டர் மரண பவத்துயரம் மாறக் - கருணை பொழியுமலை தட்டுப் புழுகுபனி நீரே வழியுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 12 | |
13 | அன்பர் கருத்தில் அனவரதம் மேவுமலை துன்பம் அகலத் துரத்துமலை - இன்பம் விளைக்குமலை செம்பொன்மக மேருவினை வில்லா வளைக்குமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 13 | |
14 | நண்பாக் குகையின் நமச்சிவா யன்கருத்தில் வெண்பாப் பயிராய் விளையுமலை - திண்பார் அளந்தமலை செஞ்சுடராய் அன்றிருவர் தேட வளர்ந்தமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 14 | |
15 | சீதமல ரோன்நெடுமால் தேடுமலை அன்பருக்குப் பாதமலர் வீடாய்ப் பலிக்குமலை - மாதவர்கள் மொய்த்தமலை உண்ணா முலைஉமையைப் பாகத்தில் வைத்தமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 15 | |
16 | வைத்தநிதி ஓம்நமச்சி வாயகுரு நாள்தோறும் மெய்த்தமிழி னால்புகழ்ந்து மேவுமலை - எத்திசையும் மின்னுமலை மாதுடனே வெள்ளிமலை வீடாக மன்னுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 16 | |
17 | முக்கோணம் ஆக முளைத்தமலை முண்டகன்மால் அக்கோடு நாகம் அணிந்தமலை - திக்கோடு துன்னுமலை தன்னைத் துதிக்குமடி யாருளத்தில் மன்னுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 17 | |
18 | வண்தமிழா லேநமச்சி வாயகுரு ஏத்துமலை கண்டுதொழு வார்க்கினிய காட்சிமலை - அண்டமுதல் நீழுமலை போற்றி நினைக்குமடி யாருளத்தே வாழுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 18 | |
19 | அஞ்செழுத்தாய் வேதமாய் ஆகமமாய் நின்றமலை விஞ்செழுத்தாய் ஒன்றாய் விளங்குமலை - நெஞ்சகத்தே தைத்தமலை நாயேனைத் தன்னடியார் கூட்டத்தில் வைத்தமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 19 | |
20 | மன்னாளும் ஓம்நமச்சி வாயகுரு செந்தமிழால் பன்னாளும் ஏத்திப் பணியுமலை - எந்நாளும் மெய்க்குமலை பொல்லா வினையேனைத் தன்னடிக்கீழ் வைக்குமலை அண்ணா மலை. அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 20 | |
21 | எந்தைகுரு நாதன் இருக்குமலை என்பாச பந்தமற நோக்கிப் பரித்தமலை - சந்திரனைத் தேய்த்தமலை நாயடியேன் சிந்திக்கும் சிந்தனைக்கே வாய்த்தமலை அண்ணா மலை. அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 21 | |
22 | அஞ்ஞானக் கங்குல் அகற்றுமலை அன்பருக்கு மெய்ஞ்ஞானச் சோதி விளக்குமலை - துஞ்ஞானச் சந்தமலை நாயேற்குத் தந்தைதாய் சற்குருவாய் வந்தமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 22 | |
23 | நீற்றை அணிந்தமலை நீள்சுடராய் நின்றமலை ஏற்றைப் பரியாக ஏறுமலை - கூற்றை உதைத்தமலை அன்றரியை ஓர்சிம்புள் ஆகி வதைத்தமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 23 | |
24 | ஓலமிடும் தேவர்குழாம் உய்யத் திருமிடற்றில் ஆலவிடம் தன்னை அடக்குமலை - நாலுமறை அந்தமலை நாயேனை ஆளக் குருவாகி வந்தமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 24 | |
25 | ஆதி நெடுமால் அயன்காண அன்றுபரஞ் சோதிச் செழுஞ்சுடராய்த் தோன்றுமலை - வேதம் முழங்குமலை சிந்திப்பார் முன்நின்று முத்தி வழங்குமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 25 | |
26 | வந்துலகில் ஓம்நமச்சி வாயகுரு வாயடியேன் சிந்தைகுடி கொண்டிருக்கும் தெய்வமலை - முந்தைவினை நீக்குமலை சொல்லரிய நீள்பிறவித் துன்பமெல்லாம் மாய்க்குமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 26 | |
27 | சத்திக்கு ஒருபாகம் தான்கொடுத்து நின்றமலை முத்திக்கு வித்தாய் முளைத்தமலை - எத்திசையும் போற்றுமலை போற்றிப் புகழ்வார் எழுபிறப்பை மாற்றுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 27 | |
28 | வால மதியை மவுலியின்மேல் வைத்தமலை சீலமுனி வோர்கள் செறியுமலை - காலம் கடந்தமலை சீறிவரும் காலனைக்கா லாலே அடர்ந்தமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 28 | |
29 | சிட்டர் இடரும் சிவநீதி இல்லாத துட்டர் சுகமும் துடைக்குமலை - நட்டம் பயிலுமலை எவ்வுலகும் பாழ்படுமென்று ஆலம் அயிலுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 29 | |
30 | கண்டம் இருளைக் கடுவிடத்தை வானவர்க்கா உண்டுபிரான் ஆகி உதவுமலை - தொண்டர் இணங்குமலை வானோரும் ஏனோரும் போற்றி வணக்குமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 30 | |
31 | துன்பப் பசிதீர்க்கும் சுத்த சிவஞான இன்பப் பசுந்தேன் இருக்குமலை - அன்பர்க்கு இருளும்அலை வாராமல் எப்போதும் காட்சி அருளுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 31 | |
32 | செகம்மருவும் ஐம்புலனில் சேராமல் ஞானச் சுகம்மருவ மேன்மைபுனை தொண்டர் - அகம்மருவும் தூயமலை வஞ்சகர்க்குத் தோன்றாம லேஒளிக்கும் மாயமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 32 | |
33 | கரத்தில் இனிய கனபொருளைத் தந்தும் சிரத்தில் அடிஇணையைச் சேர்த்தும் - பரத்தும் இகத்தும்அலை வாராமல் என்குருவாய் ஆண்ட மகத்துமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 33 | |
34 | பற்றி இமையோர் பகைசெறுவான் வந்துஎதிர்த்த வெற்றி மதராசன் வேகவே - உற்று விழித்தமலை தக்கனார் வேள்விதனை முன்நாள் அழித்தமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 34 | |
35 | பாடல் தனைவிரும்பிப் பாவலர்க்கா கப்பரவை வீடு தனக்கிருகால் மேவியே - கூட இணக்குமலை தன்புகழை எண்திசைகள் தோறும் மணக்குமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 35 | |
36 | கந்திக்கும் தேமாங் கனிபறித்துக் கார்க்கடுவன் மந்திக்கு நல்கி மகிழுமலை - சிந்திக்கும் எண்ணம்அலை வற்றோர்க்கு இனியமலை ஓரஞ்சு வண்ணமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 36 | |
37 | உன்னு தவம்புரியும் ஓம்நமச்சி வாயகுரு மன்னும் கருணைமுகில் வாழுமலை - பென்னம் பெரியமலை மாலும் பிரமனும் தேடற்கு அரியமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 37 | |
38 | வேண்டும் அயன்மால் விழிமனத்துக்கு எட்டாமல் நீண்டு தழல்பிழம்பாய் நின்றமலை - ஆண்ட கருணைமலை ஒப்புஉரைத்துக் காணஅரி தான அருணமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 38 | |
39 | வீடு முதலா விரும்பும் பொருளனைத்தும் பாடுமடி யார்க்குப் பலிக்குமலை - நீடுபுகழ் பூண்டமலை சற்குருவாய்ப் பொல்லாச் சிறியேனை ஆண்டமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 39 | |
40 | அனைத்துலகும் போற்றுதிரு ஐந்தெழுத்தை ஓதித் தனைத்தொழுது பேணும் தவத்தோர் - நினைத்தவரம் நல்குமலை எந்நாளும் நல்லோரும் நன்னெறியும் மல்குமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 40 | |
41 | மான்அனைய கண்ணார் வசமாகி நாயடியேன் ஊனவினைக் காட்டில் உழலாமல் - ஞானநெறி காட்டுமலை தன்னைக் கருதுமடி யாரிடரை வாட்டுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 41 | |
42 | பிள்ளை அறுத்துதவும் பேரா ளனைஉவந்து கொள்ள வயிரவமெய்க் கோலமாய் - மெள்ள நடந்தமலை சிம்புளாய் நாரசிங்க ரூபை அடர்ந்தமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 42 | |
43 | உய்யவரம் தந்தருளும் ஓம்நமச்சி வாயகுரு வையம்முழு தும்துதிக்க வாழுமலை - துய்யவரம் தேக்குமலை நல்லோர் செறியுமலை பெண்ணைஆண் ஆக்குமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 43 | |
44 | உண்ணா முலையாள் ஒருபாகம் ஆனமலை கண்ணார் அமுதாய காட்சிமலை - விண்ணோர் துதிக்குமலை அன்பர் தொழுதேத்தி நாளும் மதிக்குமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 44 | |
45 | நாதனரு ளான நமச்சிவா யன்கனிவாய் ஓதுதமிழ் மாலை உகந்தமலை - பாதிமதி சூடுமலை பத்திசெயும் தொண்டருடன் கூடிவிளை யாடுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 45 | |
46 | தேவரையும் தேவருக்குத் தேவராய்ச் செப்புமொரு மூவரையும் மண்ணோர் முனிவரையும் - யாவரையும் பெற்றமலை தன்பெருமை பேசுங்கால் தாய்தந்தை அற்றமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 46 | |
47 | நேசிக்கும் அன்பர் நினைவுகொடு பாவித்துப் பூசிக்கும் பூசை பொருந்துமலை - ஆசைக்குள் வீழுமலை பற்றொழிந்த மெய்யடியார் நெஞ்சகத்தில் வாழுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 47 | |
48 | நன்றிபுனை நண்பன் நமச்சிவா யன்தினமும் துன்றுமலர் தூவித் துதிக்குமலை - அன்றிருவர் தேடுமலை சந்தமும் தில்லைச்சிற் றம்பலத்தே ஆடுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 48 | |
49 | நெஞ்சகத்தில் ஒன்றி நினைப்பார்க்கு மாலறியாக் கஞ்சமொத்த பொன்னடியைக் காட்டுமலை - அஞ்செழுத்தின் நாமமலை அம்பிகைஉண் ணாமுலைஅம் மைக்குஉகந்த வாமமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 49 | |
50 | புன்தலையின் மாயன் புவிஇடந்தும் காணரிய நன்றிதரும் பொன்னடியை நாடியே - என்றுமொரு நாளும்அலை வாராமல் நாயேனைச் சற்குருவாய் ஆளுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 50 | |
51 | சண்ட விடத்தைச் சகமிறந்து போகாமல் கொண்ட திறம்பாடிக் கொண்டாடித் - தொண்டர் பணியுமலை மெய்முழுதும் பால்வெள்ளை நீற்றை அணியுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 51 | |
52 | தில்லைவனம் காசி திருவாரூர் தென்மதுரை நெல்லையிலும் பேரொளியாய் நின்றமலை - தொல்லைமறை பாடுமலை சந்ததமும் பத்தரகம் மேவிநடம் ஆடுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 52 | |
53 | மூலமுதல் உண்ணா முலைஎன்றும் அன்பருக்குச் சாலவரம் ஈந்தருளும் தாயென்று - நாலுமறை பேசுமலைப் பாகம் பிரியாச் சிவஞான வாசமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 53 | |
54 | தொல்நாவல் சுந்தரற்காத் தூதுபோய் வந்தமலை நன்மைதரத் தொண்டருக்கு நல்குமலை - மன்மதனைக் காய்ந்தமலை கூடலில்சங் கத்தா ருடன்தமிழை ஆய்ந்தமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 54 | |
55 | புண்டரிகன் மால்தேடிப் பொன்முடியும் பொன்னடியும் கண்டறிய ஒண்ணாத காட்சிமலை - தொண்டருடை ஊனமலை பற்றறுக்க ஓம்நமச்சி வாயகுரு ஆனமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 55 | |
56 | துன்றுமலர்ச் சோலைதொறும் சூழுமலைச் சோனைஎன மன்றல் கமழும் மதுமாரி - என்றும் பொழியுமலை மாறாமல் பூஞ்சுனைநீர் பொங்கி வழியுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 56 | |
57 | வேட்ட அடியார் விளக்கும் சிவஞான நாட்டம் பொழிபேரா னந்தநீர் - ஆட்டக் குளிக்குமலை நாளும் குறைவிலாச் செல்வம் அளிக்குமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 57 | |
58 | நீலமலை தேடரிதாய் நின்றமலை நின்றதழல் கோலமலை குன்றம் குனிக்குமலை - மூலமலை அந்தமலை சுந்தரற்கா அன்றிரவில் தூதுபோய் வந்தமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 58 | |
59 | தரைஎலாம் உய்யத் தனித்திருந்து செய்யும் கரையிலா மாதவத்தைக் கண்டு - விரவிஒரு பாகம்மலை மாதுபெறப் பாலித்து நின்றருளும் மாகமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 59 | |
60 | கள்ளப் புலவேடர் கைவசமா கக்கனிந்து தெள்ளத் தெளிந்தோர் செறிவாக - விள்ளக் கருத்துமலை யாதிருக்கக் காட்சிதரும் தெய்வ மருத்துமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 60 | |
61 | முக்குணமும் ஐம்புலனும் மூளா வகைஅடக்கி ஒக்குமுணர் வாஇருப்போர் உள்ளத்தே - புக்குலவும் பாதமலை தாய்வயிற்றில் பார்மீதில் வந்துபிற வாதமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 61 | |
62 | பண்அடுத்த கூடல் பழம்பதியில் பிட்டமுதை உண்ணடுத்து வைகை உடையாமல் - மண்எடுத்துப் போடுமலை சந்ததமும் பொன்னம் பலத்தில்நடம் ஆடுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 62 | |
63 | அண்டமுழு தும்பறந்தே அன்னஉரு வாய்த்தேடி மண்டலமெ லாம்கோல மாய்த்தேடிப் - புண்டரிகன் சீர்க்கமல கோனறியாத் தெய்வச் சிவஞான மார்க்கமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 63 | |
64 | கூனல் சிறுபிறையைக் கோளரவுக்கு அஞ்சாமல் வான்அப்பு அணிசடைமேல் வைத்தமலை - ஞானச் சரதமலை ஆனந்தத் தாண்டவத்துக்கு ஏற்ற வரதமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 64 | |
65 | பொருந்துதலைச் சங்கப் புலவர்தமைப் போலே விரிந்தபுகழ்க் கூடலிலே மேவி - அரும்தமிழை ஆய்ந்தமலை பார்மீதில் ஐந்தெழுத்தன் ஆகிவந்து வாய்ந்தமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 65 | |
66 | ஆதிமலை ஆதி அநாதிமலை அம்மைஒரு பாதிமலை ஓதிமறை பாடுமலை - நீதிமலை தந்த்ரமலை யந்த்ரமலை சாற்றியபஞ் சாக்கரமாம் மந்த்ரமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 66 | |
67 | அஞ்சு புலனும் அடக்கி அறிவுடையோர் வஞ்ச வினைபிறவி மாயவே - நெஞ்சில் அழுத்துமலை அன்பர் அனவரதம் போற்றி வழுத்துமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 67 | |
68 | கதித்தமுனி பாலகன்மார்க் கண்டனையே சீறிப் பதைத்துவரும் காலன் படவே - உதைத்தஒரு வீரமலை சற்குருவாய் மேவிஎனை ஆண்டபட்ச வாரமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 68 | |
69 | இமயவரும் பத்தரும்மா கேசுரரும் கானச் சமயகுரு வாம்நந்தி தாங்க - உமைஒருபங்கு ஆனமலை வாக்குமனம் காயம் தமக்கரிய வானமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 69 | |
70 | ஆத்தி கடுக்கைமுத லானமலர் ஐந்தெழுத்தால் சாத்தி அடியவரும் தக்கோரும் - ஏத்திப் புகழுமலை ஆங்கவரைப் பொற்கொடியோ டெய்தி மகிழுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 70 | |
71 | மாலூன்றிச் செய்யும் மணம்தகைந்து சுந்தரனைக் காலூன்றி ஆனக் கருணையாய்க் - கோலூண்றித் தந்த விருத்த சதுர்வே தியனாக வந்தமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 71 | |
72 | அறுகும் மதியும் அணிமுடிமேல் கூடல் மறுகு தனிலடியார் வாழ - விறகு சுமந்தமலை போற்றிசெயும் தொண்டரகம் தோறும் அமர்ந்தமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 72 | |
73 | மட்டுஉலவு கஞ்ச மலரோனும் மாயோனும் திட்டமுடன் தேடித் திகைத்தாலும் - எட்டரிய ஞானமலை பார்மீது நால்உகத்தில் நாலுவடிவு ஆனமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 73 | |
74 | மறைவடிவாம் சோமாசி மாறன்மகம் தன்னில் உறைவடிவாம் பங்கிலுமை யோடு - நிறைவடிவாய்ச் சென்றமலை அந்தணர்சூழ் தெய்வக் கனகமணி மன்றமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 74 | |
75 | எப்பொருளும் ஆகி இருசுடர் பாராக மெய்ப்பொருளும் ஆகி விளங்குமல - கைப்பொருளை ஒத்தமலை எந்தலைமெல் ஓம்நம்ச்சி வாயனடி வைத்தமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 75 | |
76 | பல்லுயிரும் கேட்டறியப் பார்த்தன்கை யாலடித்த வில்லடியும் புத்தன் மிகஎறிந்த - கல்லெறியும் பட்டமலை மன்மதனைப் பார்வையினால் வெந்துவிழ அட்டமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 76 | |
77 | வானை உருவ வளர்ந்தமலை வாம்பச்சைத் தேனைஒரு பாகத்தில் சேர்த்தமலை - யானை அணித்திரள்சேர் சாரல் அதில்வேய்கள் ஈன்ற மணித்திரள்சேர் அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 77 | |
78 | அன்று கயிலை அரக்கன் எடுத்தஅப்போ நின்றுஅவனைக் காலால் நெரித்தமலை - என்றும் அருந்துமலை எவ்வுலகும் அன்பரிடர் நோய்க்கு மருத்துமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 78 | |
79 | அன்றுபதி னாறுவயது ஆனமார்க் கண்டர்தமக்கு என்றும்ஈர் எண்வயதே என்றமலை - நின்று சிறக்குமலை தன்னடியார் செய்தகுறை எல்லாம் மறக்குமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 79 | |
80 | அன்றிருவர் தேட அனல்வடிவாய் நின்றமலை நின்றுருகும் தொண்டருக்கு நேயமலை - என்றும் நடிக்குமலை வேள்வியிலே நாரணனை ஓட அடிக்குமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 80 | |
81 | நஞ்சணியும் கண்டமலை நாளும் அடியவர்தம் வஞ்சவினை தானறுக்க வந்தமலை - நெஞ்சை இளக்குமலை அன்பர்க்கு இனியபேர் இன்பம் வளர்க்குமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 81 | |
82 | பைஅரவம் சூடுமலை பத்தர்பணிந் தேத்துமலை கையில்மழு மாந்தரித்த காட்சிமலை - துய்ய நதிஅணியும் வேணியின்மேல் நாறுமலர்க் கொன்றை (நறுமலர்க் கொன்றை ??) மதிஅணியும் அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 82 | |
83 | மயிலரவம் சேருமலை மான்புலிகள் கூடிப் பயிலுமலை வானோர் பரவும் - கயிலை பொருந்துமலை எந்நாளும் போற்றுமன்பர் நாவால் அருந்துமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 83 | |
84 | உற்றுப் புரத்தில் ஒருமூவர் தம்மைவைத்துப் பற்றி எரிந்துவிழப் பார்த்தமலை - நத்தியே நாளும் தனைத்தேடி நம்புமடி யார்தமையே ஆளுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 84 | |
85 | உள்ளும் புறமும் ஒருசெயலாம் அன்பருளம் கொள்ளுமலை நாட்டம் குளிக்குமலை - துள்ளும் எருத்தின்மேல் ஏறுமலை என்பிறவி நோய்க்கு மருத்துமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 85 | |
86 | துன்பம் அகற்றுமலை தொல்வினையை நீக்குமலை அன்பர்தமை வாஎன்று அழைக்குமலை - தன்பதத்தைக் காட்டுமலை தன்னைக் கருத்திலுறும் அன்பரிடர் வாட்டுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 86 | |
87 | போதமுற்ற மெய்யடியார் புந்தியிலே வேஓடிப் பாதமுச்சி மட்டாய்ப் படர்ந்தமலை - நாதம் தழைக்குமலை அன்பர் தபோதனரை வாஎன்று அழைக்குமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 87 | |
88 | முப்போதும் பூசித்து மோகித்துப் போற்றுமவர்க்கு (போற்றுமவர்க்) அப்போது முன்நின்று அருளுமலை - எப்போதும் (கப்போது) தாய்க்குமினி தானமலை சற்குருவாய் நாயேற்கு வாய்க்குமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 88 | |
89 | காலை உதைத்தமலை கையில்மான் சூலமலை வேலை விடமருந்தும் வெற்றிமலை - மாலை அணிசேரும் நீள்முடிமேல் அங்கரவம் ஈன்ற மணிசேரும் அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 89 | |
90 | மாறுபட்ட தக்கனுயிர் மாய்த்தமலை மாலயற்கு நீறுபட்ட செந்தழலாய் நின்றமலை - கூறுங்கால் ஒப்பனைகள் இல்லாது உயர்ந்தமலை நீள்முடிமேல் அப்பணியும் அண்ணா மலை (அப்புஅணியும்) அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 90 | |
91 | பச்சைநிறம் தானாகிப் பாதிவடிவு ஆனமலை கச்சைஎனக் கட்செவியைக் கட்டுமலை - நிச்சயமாய் மாளும் அடியேனை மாளா வகைஅருளி ஆளுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 91 | |
92 | மானொருகை வெற்றி மழுஒருகை ஆனமலை ஞானமுனி வோர்கள்நித்தம் நாடுமலை - யானை உரித்தமலை அம்மை உமைபாலே யார்க்கும் அருத்துமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 92 | |
93 | முல்லைமலர் கொன்றை முடிமேல் அணிந்தமலை எல்லைஇல்லா மாதவர்கள் ஏத்துமலை - தில்லையிலே நட்டமலை முப்புரத்தை நாடுமன்பர் மூவரைவிட்டு அட்டமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 93 | |
94 | எல்லாரும் காணற்கு இனியமலை என்னுடைய பொல்லா வினைஅறுக்கப் போந்தமலை - சொல்லாரும் நல்லமலை பொல்லாரை நாசமுறப் பார்க்கைக்கு வல்லமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 94 | |
95 | ஆழி நெடுமால் அயற்குமரி தானமலை ஊழின்வினை அன்பர்க்கு ஒழிக்குமலை - ஆழியிலே நஞ்சழலைக் கண்டு நடுங்கினரைக் காக்குமலை அஞ்சுமுகத்து அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 95 | |
96 | எத்திசையும் தோற்றுமலை ஏறுகந்து நின்றமலை சித்திவரம் ஈந்தருளிச் செய்தமலை - முத்தர்மனம் பூணுமலை அண்டர் புகழுமலை நீண்டதொரு மாணுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 96 | |
97 | வண்மைக் குணத்தவரை மாதவரை வந்தடைந்தோர் தம்மைத் தளராமல் தாங்குமலை - உண்மை பொருந்துமலை விண்ணவர்கள் போகாமல் ஆலம் அருந்துமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 97 | |
98 | வானத்துப் பூந்தருவை வாங்கிக் களிறுபிடி யானைக்கு நீட்டி அணையுமலை - ஞானத்தர் உன்னுமலை எந்நாளும் ஓம்நமச்சி வாயகுரு மன்னுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 98 | |
99 | அழியாத முத்தி அளிக்குமலை அன்பர்க்கு ஒழியா வினையை ஒழித்துக் - கழியாத ஏற்றுப் பிறப்பை இனிஅமையும் என்றருளி மாற்றுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 99 | |
100 | பெற்றம் தனில்தோன்றிப் பெய்வளையும் தானுமென்தன் குற்றம் களைந்தருளிக் கொண்டமலை - நித்தம் புதியமலை கங்கைஅணி பொற்சடைமேல் வைத்த மதியமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 100 | |
101 | அண்ணா மலைமாலை ஆனதமிழ் வெண்பாவால் தண்ஆரும் ஐந்தெழுத்தைச் சாற்றியநூல் - பண்ணாகக் கற்றவர்கள் கேட்டவர்கள் காசினியில் பேரின்பம் உற்றுலகை ஆள்வார் உவந்து அண்ணாமலை வெண்பா > நூல் பயன் > பாடல்: 101 | |
102 | மன்னுதிரு அண்ணா மலையைவலம் ஆகவந்துன் உன்னுதிரு ஐந்தெழுத்தை ஓதினேன் - தென்னருணை நாயகத்தைக் கோவிலிலே நான்கண்டேன் பெற்றெடுத்த தாயகத்தைக் கண்டவர்பொன் தாள் அண்ணாமலை வெண்பா > நூல் பாடிய முறை > பாடல்: 102 |