தொல்காப்பியம் | Tholkaapiyam | full

தொல்காப்பியம் | Tholkaapiyam | full
பாடல் எண் பாடல் Verse
0
1 எழுத்து எனப்படுப
அகரம் முதல்
னகர இறுவாய் முப்பஃது என்ப
சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே.

தொல்காப்பியம் - முதல் பாகம் - எழுத்ததிகாரம் > 1. நூல் மரபு > > > பாடல்: 1

2 அவைதாம்,
குற்றியலிகரம் குற்றியலுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன.

தொல்காப்பியம் - முதல் பாகம் - எழுத்ததிகாரம் > 1. நூல் மரபு > > > பாடல்: 2

3 அவற்றுள்,
அ இ உ
எ ஒ என்னும் அப் பால் ஐந்தும்
ஓர் அளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப.

தொல்காப்பியம் - முதல் பாகம் - எழுத்ததிகாரம் > 1. நூல் மரபு > > > பாடல்: 3

4 ஆ ஈ ஊ ஏ ஐ
ஓ ஔ என்னும் அப் பால் ஏழும்
ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப.

தொல்காப்பியம் - முதல் பாகம் - எழுத்ததிகாரம் > 1. நூல் மரபு > > > பாடல்: 4

5 மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே.

தொல்காப்பியம் - முதல் பாகம் - எழுத்ததிகாரம் > 1. நூல் மரபு > > > பாடல்: 5

6 நீட்டம் வேண்டின் அவ் அளபுடைய
கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்.

தொல்காப்பியம் - முதல் பாகம் - எழுத்ததிகாரம் > 1. நூல் மரபு > > > பாடல்: 6

7 கண் இமை நொடி என அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே.

தொல்காப்பியம் - முதல் பாகம் - எழுத்ததிகாரம் > 1. நூல் மரபு > > > பாடல்: 7

8 ஔகார இறுவாய்ப்
பன்னீர் எழுத்தும் உயிர் என மொழிப.

தொல்காப்பியம் - முதல் பாகம் - எழுத்ததிகாரம் > 1. நூல் மரபு > > > பாடல்: 8

9 னகார இறுவாய்ப்
பதினெண் எழுத்தும் மெய் என மொழிப.

தொல்காப்பியம் - முதல் பாகம் - எழுத்ததிகாரம் > 1. நூல் மரபு > > > பாடல்: 9

10 மெய்யொடு இயையினும் உயிர் இயல் திரியா.

தொல்காப்பியம் - முதல் பாகம் - எழுத்ததிகாரம் > 1. நூல் மரபு > > > பாடல்: 10

மொத்த பாடல்கள்: 490

more to come .....

முன்   முகப்பு