தமிழ் இலக்கியப் பாடல்கள் | Tamil Literary Verses

TAMILSEI.COM


தமிழ் இலக்கியப் பாடல்கள் | Tamil Literary Verses

ஆத்திசூடி
ஔவையார்
மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது.
தொல்காப்பியம்
தொல்காப்பியர்
இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூல்.
பழமொழி நானூறு
மூன்றுறை அரையனார்
நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்ட நீதிநூல்.
கொன்றை வேந்தன்
ஔவையார்
கொன்றை மலரை விரும்பி அணியும் சிவனின் புதல்வர் முருகனைப் போற்றிப் பாடியது.
மூதுரை
ஔவையார்
பழமையான அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது மூதுரை என வழங்கப்பெறுகிற தமிழ் நீதி நூலாகும்.
நல்வழி
ஔவையார்
மக்கள் தம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நல்வழிகளை நேரிசை வெண்பாவில் எடுத்துரைக்கும் தமிழ் நீதி நூல்.
இன்னா நாற்பது
கபிலர்
நாற்பது இன்னிசை வெண்பாக்களால் ஆன இந்நூலில் நூற்று அறுபத்து நான்கு கூடாச் செயல்கள் கூறப்பட்டுள்ளன.
இனியவை நாற்பது
பூதஞ்சேந்தனார்
உலகில் இனிமையான விடயங்களை எடுத்துக்கூறும் நீதி நூல். ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகின்றது.
களவழி நாற்பது
பொய்கையார்
போரில் சேரன் தோற்றுக் கைதி ஆகிறான். அவனை விடுவிக்கும் நோக்கில் பாடப்பட்டதே இந் நூல் எனக் கருதப்படுகின்றது.
அகநானுறு
பல புலவர்கள்
அகத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் தொகைநூல்.
புறநானூறு
பல புலவர்கள்
புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் தொகைநூல்.
முதுமொழிக்காஞ்சி
மதுரை கூடலூர்க் கிழார்
அறம் பொருள் இன்பத்தை அறியச் சொல்வது. இந்நூலுள் பத்துப் பத்துகள் உள்ளன.
நாலடியார்
சமணத் துறவிகள், G.U.Pope, F.W.Ellis
நான்கு அடிகளைக் கொண்ட நானூறு தனிப்பாடல்களின் வெண்பாக்களால் ஆன நீதி நூல்.
திரிகடுகம்
நல்லாதனார்
திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள.
பதிற்றுப்பத்து
பல புலவர்கள்
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து.
சிறு பஞ்ச மூலம்
காரியாசான்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது.
ஐங்குறு நூறு
கூடலூர் கிழார்
கூடலூர் கிழார் அருளிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்றானது
குறுந்தொகை
பல புலவர்கள்
எட்டுத்தொகை நூல்களில் ஒன்று
நெடுநல்வாடை
நக்கீரர்
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட நூல்.
நீதி வெண்பா
(ஆசிரியர் யார்என தெரியவில்லை)
மொத்தம் 100 பாக்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு நீதியைச் சொல்கிறது.
தமிழ் விடு தூது
(ஆசிரியர் யார்என தெரியவில்லை)
கலிவெண்பா வடிவில் ஒரு தூது இலக்கியம். இது மதுரையில் கோயிலுள்ள சொக்கநாதர் மீது காதல்கொண்ட பெண், தன் காதலை கூறிவருமாறு தமிழ் மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது.
யாப்பருங்கலக்காரிகை
அமிதசாகரர்
உலகின் தொன்மையான இலக்கண நூல்களில் தொல்காப்பியமும் ஒன்று. இந்த நெடியஇலக்கண மரபில் முக்கிய இடம் வகிக்கும் ஆக்கம் யாப்பருங்கலக்காரிகை. இது செய்யுளுக்கு இலக்கணம் கூறுகின்றது. இந்நூல் கட்டளைக் கலித்துறை எனும் பாவகையால் யாக்கப்பட்டது.

 


Thu, 30-Nov-2023 06:18:15 PM
Tamilsei.com