Photo to Painting
இவ்வளவு பெரிய வீடுகளை, அதுவும் இவ்வளவு அலங்காரமாக எப்படி கட்டியிருப்பார்கள்?? தரையில் இருந்து உத்தரம் வரை அத்தனையிலும் அழகிய வேலைப்பாடுகள்.
சரி, இன்றைய பயிற்சியாக, அதில் ஒரு வீட்டின் முகப்புத் தோற்றம் எடுத்துக் கொண்டேன். வேலைப்பாடுகள் பல கொண்ட இந்தப் படத்தில், again, எதை எடுப்பது எதை விடுப்பது?? சிலவற்றை மட்டும் கொண்டு எப்படி எளிதாக்குவது??
ஓரளவிற்கு தேவையானவற்றை மட்டும் தேர்வு செய்து பின் outline sketch போட்டாச்சு. நீர் வண்ண ஓவியத்தில் இருக்கும் சிக்கல்களை இந்தப் படம் வண்ணம் தீட்டுகையில் நிறையவே உணர முடிந்தது. சில மணி நேரங்களின் பின், மூலப் படத்தின் அழகு குறையா வண்ணம், அதன் aestheticsஐ எளிதாக ஓவியமாக்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி.
—-
நன்றி!!!
சண்முகா, கரு.
28-Jan-2024