தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

கயவர்களைப் பாடி இளைக்கின்றேன்!

வணக்கம்வரும் சிலநேரம், குமரகண்ட
 வலிப்புவரும் சிலநேரம், வலியச்செய்யக்
கணக்குவரும் சிலநேரம், வேட்டைநாய்போல்
 கடிக்கவரும் சிலநேரம், கயவர்க்கெல்லாம்
இணக்கம்வரும் படிதமிழைப் பாடிப்பாடி
 எத்தனைநாள் திரிந்துதிரிந்து இளைப்பேனையா!
குணக்கடலே! அருள்கடலே! அசுரரான
 குரைக்கடலை வென்றபரங் குன்றுளானே!

இராமச்சந்திர கவிராயர்


தனிப்பாடல் திரட்டு > சித்திர கவி > பாடல்: 25

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முகப்பு  Copy URL


Sun, Nov 09, 2025