தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

சனியான தமிழ்?

அட கெடுவாய் பலதொழிலும் இருக்கக் கல்வி, அதிகமென்றே கற்றுவிட்டோம் அறிவில்லாமல்
திடமுள மோகனமாடக் கழைக்கூத்தாடச், செப்பிடு வித்தைகளாடத் தெரிந்தோமில்லைத்
தடமுலை வேசையராகப் பிறந்தோ மில்லைச், சனியான தமிழைவிட்டுத் தையலார்தம்
இடமிருந்து தூதுசென்று பிழைத்தோ மில்லை, என்ன சென்மமெடுத் துலகில் இரக்கின்றோமே.

பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான்


தனிப்பாடல் திரட்டு > சனியான தமிழ்? > பாடல்: 36

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முகப்பு  Copy URL


Tue, 10-Sep-2024 05:50:41 PM