திருவருட்பயன் | Thiruvarutpayan |
பதம் பிரித்து | உள்ளபடியே |
---|---|
வாசி அருளியவை வாழ்விக்கும் மற்றறு அவே ஆசு இல் உருவமும் ஆம் அங்கு. | வாசி யருளியவை வாழ்விக்கு மற்றதுவே யாசி லுருவமுமா மங்கு. |
பொருள் : முத்தி பஞ்சாக்கரத்தில், வகாரமாகிய திருவருள் சிகாரமாகிய சிவத்தைக் காட்டி யகாரமாகிய ஆன்மாவை வீட்டின்பத்தில் இருத்தும். மேலும், அந்தத் திருவருளே அம்முத்தி நிலையில் ஆன்மாவிற்குக் குற்றமற்ற உடம்பாயும் நிற்கும். |