அகநானுறு | Aganaanooru

இரும்பிடிப் பரிசிலர் போலக் கடைநின்று
அருங்கடிக் காப்பின் அகனகர் ஒருசிறை
எழுதி யன்ன திண்ணிலைக் கதவம்
கழுதுவழங்கு அரைநாள் காவலர் மடிந்தெனத்
திறந்துநப் புணர்ந்து 'நும்மிற் சிறந்தோர் 5
இம்மை உலகத்து இல்'லெனப் பன்னாள்
பொம்மல் ஓதி நீவிய காதலொடு
பயந்தலை பெயர்ந்து மாதிரம் வெம்ப
வருவழி வம்பலர்ப் பேணிக் கோவலர்
மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி 10
செவியடை தீரத தேக்கிலைப் பகுக்கும்
புல்லி நன்னாட்டு உம்பர் செல்லருஞ்
சுரமிறந்து ஏகினும் நீடலர்
அருண்மொழி தேற்றிநம் அகன்றிசி னோரே! 14

அகநானுறு > 3. நித்திலக்கோவை > பாடல்: 311

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Fri, Dec 06, 2024