மாக விசும்பின் மழைதொழில் உலந்தெனப்
பாஅய் அன்ன பகலிருள் பரப்பிப்
புகைநிற உருவின் அற்சிரம் நீங்கக்
குவிமுகை முருக்கின் கூர்நுனை வைஎயிற்று
நகைமுக மகளிர் ஊட்டுகிர் கடுக்கும் 5
முதிராப் பல்லிதழ் உதிரப் பாய்ந்துடன்
மலருண் வேட்கையின் சிதர்சிதர்ந் துகுப்பப்
பொன்செய் கன்னம் பொலிய வெள்ளி
நுண்கோல் அறைகுறைந்து உதிர்வன போல
அரவ வண்டினம் ஊதுதொறுங் குரவத்து 10
ஓங்குசினை நறுவீ கோங்கலர் உறைப்பத்
துவைத்துஎழு தும்பி தவிர்இசை விளரி
உதைத்துவிடு நரம்பின் இம்மென இமிரும்
மரனே முற்ற காமர் வேனில்
வெயிலவிர் புரையும் வீததை மாஅத்துக் 15
குயிலிடு பூசல் எம்மொடு கேட்ப
வருவேம்' என்ற பருவம் ஆண்டை
இல்லை கொல்லென மெல்ல நோக்கி
நினைந்தனம் இருந்தன மாகநயந் தாங்கு
உள்ளிய மருங்கின் உள்ளம் போல 20
வந்துநின் றனரே காதலர் நத்துறந்து
என்னுழி யதுகொல் தானே பன்னாள்
அன்னையும் அறிவுற அணங்கி
நன்னுதற் பாஅய பசலை நோயே? 24
அகநானுறு > 3. நித்திலக்கோவை > பாடல்: 317 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL