குறுந்தொகை | Kurunthogai | full |
பாடல் எண் | பாடல் | Verse |
---|---|---|
0 | கடவுள் வாழ்த்து தாமரை புரையுங் காமர் சேவடிப் பவழத் தன்ன மேனித் திகழொளிக் குன்றி யேய்க்கும் உடுக்கைக் குன்றின் நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேற் சேவலங் கொடியோன் காப்ப ஏம வைகல் எய்தின்றால் உலகே. -பாரதம் பாடிய பெருந்தேவனார். குறுந்தொகை > கடவுள் வாழ்த்து > பாடல்: 0 | |
1 | குறிஞ்சி - தோழி கூற்று செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக் கழல்தொடிச் சேஎய் குன்றம் குருதிப் பூவின் குலைக்காந் தட்டே. -திப்புத் தோளார். குறுந்தொகை > நூல் > பாடல்: 1 | |
2 | குறிஞ்சி - தலைவன் கூற்று கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீயறியும் பூவே. -இறையனார். குறுந்தொகை > நூல் > பாடல்: 2 | |
3 | குறிஞ்சி - தலைவி கூற்று நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. -தேவகுலத்தார். குறுந்தொகை > நூல் > பாடல்: 3 | |
4 | நெய்தல் - தலைமகள் கூற்று நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி அமைதற் கமைந்தநங் காதலர் அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே. -காமஞ்சேர் குளத்தார். குறுந்தொகை > நூல் > பாடல்: 4 | |
5 | நெய்தல் - தலைவி கூற்று அதுகொல் தோழி காம நோயே வதிகுரு குறங்கும் இன்னிழற் புன்னை உடைதிரைத் திவலை அரும்புந் தீநீர் மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே. -நரிவெரூ உத்தலையார். குறுந்தொகை > நூல் > பாடல்: 5 | |
6 | நெய்தல் - தலைவி கூற்று நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந் தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று நனந்தலை உலகமும் துஞ்சும் ஓர்யான் மன்ற துஞ்சா தேனே. -பதுமனார். குறுந்தொகை > நூல் > பாடல்: 6 | |
7 | பாலை - கண்டோர் கூற்று வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர் யார்கொல் அளியர் தாமே ஆரியர் கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி வாகை வெண்ணெற் றொலிக்கும் வேய்பயில் அழுவம் முன்னி யோரே. -பெரும்பதுமனார். குறுந்தொகை > நூல் > பாடல்: 7 | |
8 | மருதம் - காதற் பரத்தை கூற்று கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉ மூரன் எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற் கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே. -ஆலங்குடி வங்கனார். குறுந்தொகை > நூல் > பாடல்: 8 | |
9 | மருதம் - தோழி கூற்று யாயா கியளே மாஅ யோளே மடைமாண் செப்பில் தமிய வைகிய பெய்யாப் பூவின் மெய்சா யினளே பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல் இனமீ னிருங்கழி யோத மல்குதொறும் கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும் தண்ணந் துறைவன் கொடுமை நம்மு னாணிக் கரப்பா டும்மே. -கயமனார். குறுந்தொகை > நூல் > பாடல்: 9 | |
10 | பாலை - தோழி கூற்று யாயா கியளே விழவுமுத லாட்டி பயறுபோ லிணர பைந்தாது படீஇயர் உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக் காஞ்சி யூரன் கொடுமை கரந்தன ளாகலின் நாணிய வருமே. -ஓரம்போகியார். குறுந்தொகை > நூல் > பாடல்: 10 |