௩
சிறப்புப்பாயிரம்.
சொல்லொரு பொருளுணர்ந் தோன்சோதிட நீதிவல்லோன்
நல்லறிவா ளனெங்கண றுங்குன்றை ஞானமூர்த்தி
பல்லுயிர்க் கொருதாயாகும் பரமன்மா முனிவன்மெய்ந்நூல்
வல்லுநர் வல்லார்க்கெல்லாம் வரையறத் தரையில்வந்து.
இ - ள். சொல்லொடு பொருள் உணர்ந்தோன் - சொற்களோடு அவ்வவற்றின் பொருள்களை அறிந்தவரும், --சோதிடம் நீதி வல்லோன் - சோதிடநூலிலும் நீதிநூலிலும் வல்லவரும், --நல்லறிவாளன் - நல்ல அறிவினையுடையவரும், --நறுங்குன்றை எங்கள் ஞானமூர்த்தி - நல்ல குன்றையூரிலிருக்கின்ற எங்களுடைய ஞானமே வடிவமாகக் கொண்டவரும், --பல் உயிர்க்கு ஒரு தாய் ஆகும் பரமன் - பல ஆன்மாக்களுக்கு ஒப்பில்லாத மாதாவாயுள்ள சிரேஷ்டரும், --மா முனிவன் - பெரிய முனிவருமாகி, --வரை அற மெய்ந்நூல் வல்லுநர் வல்லார்க்கு எல்லாம் தரையில் வந்து - வரைவின்றி மெய்மையாகிய நூல்களிலே வல்லவர் வல்லவரல்லாதவராகிய யாவர்நிமித்தமும் பூமியின்கண்ணே அவதரித்து. எ - று.
(௪)
பரிதியொன்று தயஞ்செய் துபங்கய மநேககோடி
முருகெழமலர் வித்தென்ன முகமுடன கமலர்த்தி
மருவுமுத்தமிழை முன்னாள் வளர்த்தபாண்டியனே போலக்
கருதிய வெல்லாந் தந்துகவிமணி மாலைசூடி.
இ - ள். பரிதி ஒன்று உதயம் செய்து பங்கயம் அநேக கோடி முழுகு எழ மலர்வித்து என்ன முகமுடன் அகம் மலர்த்தி - ஒருசூரியன் உதித்து அநேககோடி தாமரைமலர்களை மணமெழும்படியாக அலரச்செய்தாற்போல முகத்தோடு நெஞ்சத்தை அலரச்செய்து, --மருவும் முத்தமிழை முன்னாள் வளர்த்த பாண்டியன்போல - பொருந்திய (இயல் இசை நாடகமென்னும்) மூன்று தமிழ்களையும் முற்காலத்தில் வளர்த்த பாண்டியராசனைப்போல --கருதிய எல்லாம் தந்து - நினைத்தவைகள் யாவையும் தந்து, --மணிக் கவி மாலை சூடி - அழகினையுடைய பாமாலையைச் சூடி. எ - று. ஏ அசை.
(௫)
செகமெனும் பளிங்குமாடத் திகிரிவேந்தரையே போலப்
புகழெனும் பஞ்சிசேர்த் திப்பொலிவுறு பேரத்தாணி
மகிழ்குண பத்திரனெங்கள் வழித்தெய்வம் போல்வான்சொல்ல
இகபர மிரண்டும் வேண்டியியலிசை வல்லோர்கேட்ப.