TAMILSEI.COM

05. திருச்சதகம் – (8) ஆனந்தத்து அழுந்தல் – Immersing in Happiness – Thiruvaasagam – திருவாசகம்

05. திருச்சதகம் – (8) ஆனந்தத்து அழுந்தல் – Immersing in Happiness

புணர்ப்பது ஒக்க எந்தை என்னை ஆண்டு பூண நோக்கினாய்
புணர்ப்பது அன்று இது என்றபோது நின்னொடு என்னொடு என்இது ஆம்
புணர்ப்பது ஆக அன்று இது ஆக அன்பு நின்கழல் கணே
புணர்ப்பது அது ஆக அம் கனாள் புங்கம் ஆன போகமே. (1)

Oh my Father! You looked at me as if you wished to grant me salvation. But when you realised that I was not yet ready for such an attainment, you distanced yourself from me. Whether you take me under your feet or not, may the love that I hold for your feet help me to reach you. Let it help me to attain a place under your feet.

போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தரஆதி இன்பமும்
ஏகநின் கழல் இணை அலாது இலேன் எம்பிரான்
ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்சலிக் கணே
ஆக என் கை கண்கள் தாரை ஆறு அது ஆக ஐயனே. (2)

Oh my Father! I do not ask for riches or the pleasures of heaven! I have no other attachments except to your feet. Oh my Lord! When I think of you, my body trembles as if it has separated from my soul. My hands are raised above my head and held together in worship and my eyes pour floods of tears.

ஐய நின்னது அல்லது இல்லை மற்று ஓர் பற்று வஞ்சனேன்
பொய் கலந்தது அல்லது இல்லை பொய்மையேன் என்எம்பிரான்
மை கலந்த கண்ணி பங்க வந்து நின் கழல் கணே
மெய் கலந்த அன்பர் அன்பு எனக்கும் ஆகவேண்டுமே. (3)

Oh Lord! I never held anyone dear to me other than you. A cheat and a liar that I am, had never been untruthful towards you. Oh Lord who has the dark eyed maiden as His half! Please give me the ability to show you the same devotion that is shown towards your feet by your true devotees.

வேண்டும் நின் கழல் கண் அன்பு பொய்மை தீர்த்து மெய்ம்மையே
ஆண்டு கொண்டு நாயினேனை ஆவ என்று அருளு நீ
பூண்டு கொண்டு அடியனேனும் போற்றி போற்றி என்றும் என்றும்
மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன நின் வணங்கவே. (4)

Oh Lord! I need the love of your feet. You removed from this dog like soul, what is false and taught me the truth. Bless me so that I can attain salvation. I will wear your feet on my head and hail you with the words, ‘Potri Potri’ through my cycle of births and deaths. Please grant me my wish.

வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலம் இட்டு
உணங்கும் நின்னை எய்தல் உற்று மற்று ஓர் உண்மை இன்மையின்
வணங்கியாம் விடேங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு
இணங்கு கொங்கை மங்கை பங்க என் கொலோ நினைப்பதே. (5)

Oh my Lord, who has Mother Parvathy as the other half! The sky and the earth worship you. The four Vedas have failed to reach you and are wailing in distress. As there is no other truth but you and we worship you without fail. What prevents you from appearing before us and granting our wishes?

நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை ஏய வாக்கினால்
தினைத் தனையும் ஆவது இல்லை சொல்லல் ஆவ கேட்பவே
அனைத்து உலகும் ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா
எனைத்து எனைத்து அது எப்புறத்து அது எந்தை பாதம் எய்தவே. (6)

My Father! The mind tries to think about you. Because of the lack of words, the mouth is unable to say even a grain of word to describe you. It is only through words that this world can know about you. Even the five senses are unable to understand you who fill the whole world. Though I wish to reach your feet, I do not know where to go and which direction to take.

எய்தல் ஆவது என்று நின்னை எம்பிரான் இவ்வஞ்சனேற்கு
உய்தல் ஆவது உன் கண் அன்றி மற்று ஓர் உண்மை இன்மையில்
பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு பாவியேற்கு
ஈதலாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை ஈசனே. (7)

My Lord! When am I going to reach you? This deceiver can attain salvation only under you, as there is no other truth except you. Please take pity on me and protect me from harm. This sinner has no other way to join you except by your grace.

ஈசனே நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும்
பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன் என் எம்பிரான்
நீசனேனை ஆண்டுகொண்ட நின்மலா ஓர் நின் அலால்
தேசனே ஓர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே. (8)

I, a fool told everyone that you are the supreme god both in this world and in the other and that you show no difference between the various lives. Oh God who rules over me, I cannot even think of any god other than you. That is the truth.

சிந்தை செய்கை கேள்வி வாக்குச் சீர் இல் ஐம்புலன்களால்
முந்தை ஆன காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன்
வெந்து ஐயா விழுந்திலேன் என் உள்ளம் வெள்கி விண்டிலேன்
எந்தை ஆய நின்னை இன்னம் எய்தல் உற்று இருப்பனே. (9)

By thoughts, deeds, hearing, speech and the faulty five senses, this ruffian had failed to reach you in the past. For that failure, I had not burnt myself, my mind had not burst itself. I still live in this world expecting to reach you one day.

இருப்பு நெஞ்சம் வஞ்சனேனை ஆண்டு கொண்ட நின்னதாள்
கருப்புமட்டும் வாய் மடுத்து எனைக் கலந்து போகவும்
நெருப்பும் உண்டு யானும் உண்டு இருந்தது உண்டது ஆயினும்
விருப்பும் உண்டு நின்கண் என்கண் என்பது என்ன விச்சையே. (10)

I am deceitful and have a heart of iron. Yet you gave me the sweet pleasure by taking me under your feet. Your thoughts then left me. The fire was there and I continued to be there (without perishing in it). It is due to my ignorance that I still say that I have love for you.

திருச்சிற்றம்பலம்

< PREV | NEXT >
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows