TAMILSEI.COM

24. அடைக்கலப்பத்து – Adaikalap Paththu – Thiruvaasagam – திருவாசகம்

24. அடைக்கலப்பத்து – Adaikalap Paththu

பக்குவ நிர்ணயம் – Determination of Maturity

செழுக்கமலத் திரளனநின் சேவடி சேர்ந் தமைந்த
பழுத்தமனத் தடியர்உடன் போயினர் யான் பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக் கல்வி ஞானமிலா
அழுக்குமனத் தடியேன் உடையாய் உன் அடைக்கலமே. (1)

Your true devotees who had gathered around your lotus like feet had gone together and have attained salvation. I, the sinner, the one with the foul body infested with worms who has no learning or wisdom and therefore of a dirty mind is still here. O my Master! Give me refuge.

வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை நின் பெருமையினாற்
பொறுப்பவனே அராப் பூண்பவ னேபொங்கு கங்கைசடைச்
செறுப்பவனே நின்திருவருளால் என் பிறவியை வேர்
அறுப்பவனே உடையாய்அடியேன்உன் அடைக்கலமே. (2)

O the Lord who wears serpent as an ornament! You wear the river Ganges on your crown of hair! You sever my cycle of birth by Your grace! You forgive my meanness and hateful acts due to your magnanimity. O my Master! I am your slave! Give me refuge!

பெரும்பெருமான்என் பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத்
தரும்பெருமான் சதுரப்பெருமான் என் மனத்தினுள்ளே
வரும்பெருமான் மலரோன் நெடுமாலறியாமல் நின்ற
அரும்பெருமான் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. (3)

O the Supreme God! The God who severs my cycle of birth and makes me insane with love! The one with complete powers! The one who appears in my mind! The rare God who remained unseen by Thirumal and Brahma. O my Master, I am your slave! Give me refuge!

பொழிகின்ற துன்பப் புயல்வெள்ளத்தில்நின் கழற்புணைகொண்டு
இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்யான் இடர்க்கடல்வாய்ச்
சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச் சுறவெறிய
அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே (4)

O my Master! Your devotees who were sinking in the raging flood of misery were able to escape it and reach heaven by holding on to your sacred feet. I was caught in the whirlpool of women and the waves of lust and am getting destroyed. I am your slave! Give me refuge!

சுருள்புரி கூழையர் சூழலிற் பட்டுன் திறம்மறந்திங்கு
இருள்புரி யாக்கையிலேகிடந் தெய்த்தனன் மைத்தடங்கண்
வெருள்புரிமான்அன்ன நோக்கிதன் பங்கவிண்ணோர்பெருமான்
அருள்புரியாய் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. (5)

O Lord who has as His half, the Goddess whose dark coloured eyes cast the look of a frightened deer! The Lord of the heavenly beings! I am caught in the clutches of curly haired women and I am immersed in the darkness caused by my body’s lust, which made me forget Your greatness. O my Master, I am your slave! Give me refuge!

மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத் திடவுடைந்து
தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன் தடமலர்த்தாள்
வாழிஎப் போதுவந்து எந்நாள் வணங்குவன் வல்வினையேன்
ஆழியப் பாஉடை யாய் அடியேன் உன் அடைக்கலமே. (6)

O my sea like father! I am like the curd that is scattered in all directions and sticking to the side of the pot when the curd is churned by women with dark eyes that look like slit tender mangoes. I am a sinner. On which day and on what time will I be able to come and worship you. O my Master, I am your slave! Give me refuge!

மின்கணினார் நுடங்கும் இடையர் வெகுளிவலையில் அகப்பட்டுப்
புன்கண னாய்ப்புரள் வேனைப் புரளாமற் புகுந்தருளி
என்கணிலே அமுதூறித்தித் தித்தென் பிழைக்கிரங்கும்
அங்கணனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. (7)

O the Lord with merciful vision! I am caught up in the angry pretence of the women with glistening eyes and swaying hips and am wallowing in their pleasures. You entered me and redeemed me from such pleasures and pardoned me for my faults and gave me the pleasure of your nectar like mercy. O my Master, I am your slave! Give me refuge!

மாவடு வகிரன்ன கண்ணி பங்காநின் மலரடிக்கே
கூவிடுவாய் கும்பிக்கே யிடுவாய் நின் குறிப்பறியேன்
பாவிடையாடு குழல்போற் கரந்து பரந்தஉள்ளம்
ஆகெடுவேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. (8)

O my Master! The One who shares His body with the Goddess whose eyes are like sliced tender mango! Call me to Your flowery feet or send me to hell. I do not know what your plans are. Like a shuttle being thrown between players, my mind is wandering here and there and thus getting ruined. I am your slave! Give me refuge!

பிறிவறியா அன்பர்நின் அருட்பெய்கழல் தாளிணைக்கீழ்
மறிவறியாச் செல்வம் வந்து பெற்றர் உன்னை வந்திப்பதோர்
நெறியறி யேன் நின்னையே அறியேன் நின்னையே அறியும்
அறிவறியேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. (9)

O my Master! Your devotees, who never knew of leaving You, approached Your merciful feet and received the incomparable wealth of bliss. But I do not know the rituals to worship You , I do not understand You and I do not know how to acquire the knowledge to understand you. I am your slave! Give me refuge!

வழங்குகின்றாய்க்குன் அருளார் அமுதத்தை வாரிக்கொண்டு
விழுங்குகின்றேன் விக்கினேன் வினையேன் என்விதியின்மையால்
தழங்கருந் தேனன்ன தண்ணீர் பருகத்தந் துய்யக் கொள்ளாய்
அழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. (10)

O my Master! You poured your nectar of grace. I swept up that nectar and swallowed it. I, the sinner then choked due to lack of good fate. Please bless me by offering your grace which is like honey sweet water that could save me from my grief. I am your slave! Give me refuge!

திருச்சிற்றம்பலம்

< PREV | NEXT >
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows