Photo to Painting - 🅆🄰🅃🄴🅁🄲🄾🄻🄾🅁
ஒவ்வோரு தை மாதத்திலும் காளைகளுக்குக் கொண்டாட்டம் தான். ஊருக்கு ஊரு போட்டி போட்டு காளை வளர்ப்பும், அவற்றை அடக்கும் காளைகளும் எனத் திரும்பிய பக்கமெல்லாம் திருவிழாக்கோலம். அதில் ஒரு படத்தை இன்று ஓவியமாக்கும் முயற்சி.
முகநூல் நண்பர் குணா அமுதன் அவர்களின் படம். முட்டித் தூக்கும் காளையும், பற்றிய திமிலை விடாது காற்றில் பறக்கும் காளையும் பார்க்கையில் நாமே களத்தில் இருப்பது போன்ற உணர்வு. இதனை வண்ணத்தில் எளிமையாக்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி.
—-
நன்றி!!!
சண்முகா, கரு.
04-Feb-2024