பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியை ஆத்தம தாகவே ஆய்ந்தறி வார் இல்லை காத்துடல் உள்ளே கருதி இருந்தவர் மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே. 28
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 4. நவகுண்டம் > பாடல்: 1042
and spreads everywhere They seek not in truth and know not; Those who have tendered it within their body, Live long, long, For ten million aeons, as it were.
உருவத்தால் ஓம குண்டத்தளவிலே நின்ற தாயினும், ஆற்றலால் எவ்விடத்தும் நிறைந்து நிற்கும் ஓமாக்கினியைத் தமக்கு எல்லா நலனையுந் தரும் அருந்துணையாக ஆராய்ந்தறிபவர் ஒருவரும் இல்லை, அவ்வாறு அறிந்து அதனை முறைப்படி ஓம்பி, மனத்திலும் தியானிப்பவர் உடல், ஆண்டுகள் பல சென்றாலும் அழிவின்றிப் பல யுகங்களைக் கண்டு கொண்டிருந்தவாறு பல இடங்களில் கேட்கப் படுகின்றது.