உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க அகங்கண்ட யோகியுள் நாடி எழுப்பும் பகங்கண்டு கொண்டஇப் பாய்கரு வொப்பச் சகங்கண்டு கொண்டது சாதன மாமே. 29
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 4. நவகுண்டம் > பாடல்: 1043
As in the nine sacrificial pits that transcend Time, The Yogi in his Nadis raises the fire in Centers nine; Even as the Seed of Birth trembled in fear of it, So did the universe vast, At the mighty yogic achievement.
அக வழிபாடாகிய யோகத்தை நன்கறிந்த யோகி, மேற்கூறியவாறு பல யுகங்கள் அழியாதிருத்தற்கு ஏதுவாகிய நவ குண்ட வேள்வியையும் ஒருங்கே தன் உடலகத்துள் முறையறிந்து வளர்ப்பான். தாய் வயிற்றினுள் தங்கிப் பிறக்கின்ற கருவிற்கு அவளது குறிபோல எல்லாப் பயன்களது விளைவிற்கும் இன்றியமையாச் சாதனமாக உலகம் கண்டது வேள்வியே.