உணர்ந்த உலகு ஏழையும் யோகினி சத்தி உணர்ந்துஉயி ராய்நிற்கும் உன்னதன் ஈசன் புணர்ந்தொரு காலத்துப் போகமது ஆதி இணைந்து பரமென்று இசைந்துஇது தானே. 16
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 8. ஆதாரவாதேயம் > பாடல்: 1170
She conceives worlds seven; She is Yogini Sakti, She cognizes life and as its support stands; Of yore she joined Lord in creative union And became Bhoga Sakti; And then She was Param Herself (Parasakti) Undifferentiated from Siva.
சிவன் தனது சங்கற்ப மாத்திரையானே தோற்று வித்த ஏழு உலகங்களையும், அவ்வுலகத்தோடே பொருந்துவதாகிய சத்தி, தான் அறிந்து, அவற்றிற்கு உயிராய், அவைகளோடு கலந்து நிற்கும். அங்ஙனம் நிற்கின்ற அச்சத்திக்குச் சத்தனாய் நிற்கின்ற இறைவன் அச் சத்தியை மணந்த பொழுதே உயிர்கட்குப் போகம் அமையும். அச் சிவத்தோடு இணைந்து நின்ற இச்சத்தியே உலகிற்குத் தலைமையாவது.