முத்திரை மூன்றின் முடிந்தமெய்ஞ் ஞானத்தன் தத்துவ மாய்அல்ல வாய சகலத்தள் வைத்த பராபர னாய பராபரை சத்தியும் ஆனந்த சத்தியும் கொங்கே. 22
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 8. ஆதாரவாதேயம் > பாடல்: 1176
She of Mudras triple, and Jnana perfect, She is the Tattvas, and the not-Tattvas She is pervasive-all, She is Paraparai that ParaParan holds She is Sakti and Ananda Sakti too, She indeed is of fragrance intoxicating.
மலரில் மணம் போலச் சிவத்தில் வேறாகாது நிற்பவளாகிய சத்தி மூன்று பிரிவுகளாய் அமைந்த பஞ்ச தசாட்சரி (பதினைந் தெழுத்து) மந்திரத்தில் முற்ற விளங்குகின்ற மெய்ஞ்ஞான வடிவினள்; தத்துவங்களாயும், அவை யல்லவாயும் எல்லாமாய் இருப்பவள்; வேதம் முதலிய நூல்கள் பலவும் முடித்துக் கூறுகின்ற சிவனோடு ஒன்றான சிவையாய் விளங்குபவள்; அருட் சத்தியும், ஆனந்த சத்தியுமானவள்.