திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 8. ஆதாரவாதேயம் > பாடல்: 1190
There She abided, the bejewelled One There She abided in Center Finite There She abided as Holy Way There She abided as Bliss Infinite, There She abided All worlds praising her, And yearning for Her; There She abided, the Goodly Lady.
சத்தி மேற்கூறிய அவ்விடத்தே இனிது விளங்கி யிருக்கின்றாள்; பல புவனங்களில் உள்ளோரும் தாம் பேரானந்தத்தை அடைதற்குரிய செவ்விய வழியைப் பொருந்தித் தன்னை, `போற்றி` என்று சொல்லித் துதித்துப் பெருமுயற்சி செய்யவும் சத்தி அவர்கள் முன் வெளிப்படாமல், மேற்கூறிய இடத்தே அந்த ஆனந்தம் விளையும்படி அங்கே விளங்கி நிற்கின்றாள்.