உருவம் பலஉயி ராய்வல்ல நந்தி தெருவம் புகுந்தமை தேர்வுற நாடில் புரிவளைக் கைச்சிஎம் பொன்னணி மாதை மருவி இறைவன் மகிழ்வன மாயமே. 94
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 8. ஆதாரவாதேயம் > பாடல்: 1248
Lord Nandi That has form several, And permeates life several, Why does He in this Form (with Sakti) So open appear? That He thus sports in joy With Her of bangled hands, And Form bejewelled, Is indeed a mystery, baffle!
பல உடம்புகளும், அவற்றில் உள்ள பல உயிர் களுமாய் நிறைந்து நிற்கின்ற சிவன் உயிர்களுக்குப் பல வேறு வடிவினனாய்க் காட்சியளித்தலை ஆராயின், அவையெல்லாம் அவன் தனது சத்தியோடு மணந்து மகிழ்கின்ற அருள் நாடகமே.