திருமந்திரம் > ஐந்தாம் தந்திரம் > 9. சன்மார்க்கம் > பாடல்: 1484
Unto that rare seeker in Sanmarga path The rest of three paths, of themselves open; That alone is True Path union with Siva seeks; Seek that Path As Guiding Word scriptures proclaim.
சன்மார்க்கம் கைவரப்பெறும் தகுதியை அடைய விரும்பும் அரிய மாணாக்கர்க்கு, அதற்கு முன்னே ஏனை, யோகம் முதலிய மூன்றும் முற்ற வேண்டுதலே முறையாகுமாயின், வீடடையும் நெறியாவது, தன்னைச் சிவனுக்கு உரிய பொருளாக உரிமைப்படுத்து அறிதலேயாகின்றது, `இதுதான் ஆசிரியன்மார் தம் மாணாக்கர்க்கு அறிவுறுத்தத்தக்க நெறி` என்று உண்மை வேதம் தனது துணிவாகக் கொண்டு கூறுகின்றது.