வாயென்று சொல்லி மனமொன்று சிந்தித்து நீயொன்று செய்யல் உறுதி நெடுந்தகாய் நீயென்றிங் குன்னைத் தெளிவன் தெளிந்தபின் பேயென்றிங் கென்னைப் பிறர்தெளி யாரே. 4
திருமந்திரம் > ஆறாம் தந்திரம் > 13. அபக்குவன் > பாடல்: 1683
The lips utter one thing; The mind thinks another; And the deed does a third, Thus you behave not; Gracious Lord! You Rock of Ages! I know You as the Fire-hued Lord, And having known that None dares know me as creature insensate.
பெருந் தகுதியாகிய பக்குவத்தை எய்திய மாணவனே, நீ யாதொரு செயலிலும் `மனம், மொழி மெய்` என்னும் மூன்றும் ஒருவழிப்பட நிற்றல் வேண்டுமன்றி, அவை தனித்தனி வேறு வேறு வழிப்பட நிற்றல் கூடாது. அங்ஙனம் அவை ஒருவழிப்பட நிற்றலே உனக்கு நன்மையைப் பயப்பதாகும். அவை வேறு வேறு வழிப்படல் இழந்தோரது இயல்பாதலின், நீ அவை அவ்வாறுபட நிற்பின், உன்னை யான், `பக்குவம் வாயாத இழிமகன்` என்று உறுதி யாகக் கொண்டு விலக்குவேன். ஆனால், உணர்விலாராய உலகர் அது பற்றி என்னைப் பின் வெகுளி மிகுதியால் பேய்த்தன்மை எய்தியவன் என இகழ்வர்.