விளையும் பரவிந்து தானே வியாபி விளையும் தனிமாயை மிக்கமா மாயை கிளையொன்று தேவர் கிளர்மனு வேதம் அளவொன் றிலாஅண்ட கோடிக ளாமே. 22
திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 9. திருவருள் வைப்பு > பாடல்: 1813
The Bindu that thus arose pervades everywhere; From it rises the Maya per se and the Mahamaya And from them emanate the immortals and their clans The Mantras and the Vedas too, And the countless countless worlds swarming in the spread.
எல்லாக் காரியங்களின் தோற்றத்திற்கும் முதலாய் நிற்கின்ற பரவிந்துவே, பிற எல்லாப் பொருள்களையும் தன்னுள் அடக்கி வியாபகமாய் நிற்கும். அது மல கன்மங்களோடு விரவுதல் இன்றித் தூயதாயும் உள்ளது. அதனால் அது `மகாமாயை` எனவும் படுகின்றது. அஃது அபர முத்தர்களாகிய மந்திர மகேசுரர், அணுசதா சிவர் முதலியோருடைய தனு கரணங்களாகவும், சத்த கோடி மகா மந்திரங்களாகவும், வேத சிவாகமங்களாகவும் மேற்கூறியோருடன் மற்றும் விஞ்ஞான கலர்களும் வாழும் அளவற்ற அண்டங்களாயும் விளைந்து பயன்படும்.