தலைமிசை வானவர் தாழ்சடை நந்தி மிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப் புலைமிசை நீங்கிய பொன்னுலகு ஆளும் பலமிசை செய்யும் படர்சடை யோனே. 11
திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 14. அடியார் பெருமை > பாடல்: 1878
The Celestial Beings bore on their heads The Nandi of the flowing matted locks; He on earth raised me high His holy work to perform; Higher still will He lift me, Unto the Golden Kingdom of Purity to rule, --He of the spreading matted Locks.
தேவர்கள் தம் தலையால் தனது திருவடிமேல் வணங்குகின்ற, தாழ்ந்த சடையை உடைய சிவபெருமான் தனக்கு உண்மையான தொண்டினைச் சிலர் செய்ய அதற்குப் பயனாக அவரைத் தேவர்கள் தம் தலைமேல் வைத்துப் போற்றும்படி வைத்தான். அதற்குமேல் அவன் அவரை முக்குணங்களும், கன்மமும், ஆணவமும் இல்லாத ஒளிமயமான மேல் உலகத்தை ஆள்கின்ற பயனையும் கூட்டுவிப்பான்.