அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95
சிவபுராணம் > பாடல்: 19
Thou Who dost cut off evil birth ! - Adoring ever, Thee they name, Whom words declare not; then 'NEATH THY SACRED FEET THEY LEARN THE MEANING OF THEIR SONG. The blessed ones In Civan's town who dwell, - full many a one, - beneath The feet of Civan, lowly bending utter praise. (95)