காயத்தி லேமூன்று நாளில் கலந்திட்டுக் காயத்துள் தன்மனம் ஆகும் கலாவிந்து நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின் மாயத்தே செல்வோர் மனத்தோடு அழியுமே. 13
திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 20. விந்துற்பனம் > பாடல்: 1935
When in the body for three days it remains thus, It becomes a part of the Mind; As Kala Bright--Intelligence illumined; For those immersed in thoughts holy, it is there retained; For those who in sex intercourse indulge, It will depart, their mental powers deteriorated.
மேற்கூறியவாறு முன் இருபத்தொரு நாள் வரையில் முதிர்ந்து வந்த விந்துக்கள் பின் இருபத்தொரு நாட்கள் வரையில் மனத்தின் வழிப்பட்டு நிற்கும். `சத்தி நிபாதரும், உலகரும்` எனமக்கள் இருதிறத்ததராதலின் அவருள் சத்திநிபாதர் மனம் சிவன் பஞ்சமூர்த்திகளாய் விளங்கி நிற்கின்ற நிவிர்த்தி முதலிய பஞ்ச கலா ரூபமாய் நிற்கும் சுத்த மாயையை நோக்கிச் செல்லுமாகலின் அவர் காம வசப்பட்டு விந்துவை வெளியே வீழ்ந்தொழிய விடாமையின் அவை அவரை விட்டு நீங்கா. (அவரது மனம் பஞ்ச கலைகளை நோக்கிச் செல்கின்ற செலவிற்கு அவை வலிமை தந்து நிற்கும் என்பதாம். அவரொழிந்த ஏனை உலகர் சிறிதுபோதிலே நிலையின்றி ஒழிவதாகிய காம இன்பத்திலே செல்பவர் ஆதலின் அவர் மனம் அங்ஙனம் சென்ற பொழுது அவரது விந்துக்களும் அதனுடன் சென்று வெளியே வீழ்ந்து அழிந்தொழியும்.