திருமந்திரம் > முதல் தந்திரம் > 6 கொல்லாமை > பாடல்: 197
Flowers many to dear, loved Master's worship; Even one atom of life, kill not: The lovely garland, the steady flame, the firm will, The passionate heart--such the worship's crowning part.
மெய்யுணர்வு நிலைபெறுதற்குத் துணையாய குருவழிபாட்டிற்கும் பல மலர்களால் தொடுக்கப்பட்டமாலை முதலியவை இன்றியமையாதனவே. ஆயினும், சிறப்புடைய மாலை பிற உயிர்களைக் கொல்லாமைகள் பலவும் இயைந்த பண்பே. இன்னும் சிறப்புடைய அசையா விளக்கு ஒருதலைப் பட்ட மனமும், இலிங்கம் இருதயத்தில் பொருந்தி நிற்கும் உயிராகிய ஒளியின் முனையுமாம்.