புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை அடையப்பட் டார்களும் அன்பில ராயினார் கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே. 1
திருமந்திரம் > பாயிரம் > 10நல்குரவு > பாடல்: 209
Garments to tatters torn, life a joyless desert becomes; Loved ones and dear friends forsake, with no more love to spare; Nothing more to give or ask, void of glory and pomp, Neglected, like automatons they walk, sad and bare.
ஒருவர்க்கு அவர் உடுத்திருக்கும் ஆடை கிழிந்த ஆடையாய் இருந்ததென்றால், அவரது வாழ்க்கையும் கிழிந்தொழிந் ததேயாம். ஏனெனில், தம்மால் தமக்குத் துணையெனத் தெளியப்பட்ட வரும் தம்மாட்டு அன்பிலாராகின்றனர். நாட்டில் நடைப் பிணமான அவர்க்கு எவரோடும் கொடுத்தல் கொள்ளல்கள் இல்லை; அதனால் அவர் இல்லத்தில் யாதொரு விழாவும் இல்லை; பிற உலக நடையும் இல்லை; ஆகையால்.