Ξ
இலக்கியம்
திருமுறைகள்
இலக்கணம்
எண்
எழுத்து
மொழி
சொற்கட்டு
ஒலி பெயர்க்க
பா வகைகள்
சீர் பிரிக்க
கட்டளைக் கலித்துறை
வழிபாட்டுப் பாடல்கள்
தனிப்பாடல் திரட்டு
வாழ்வியல்
விடுகதைகள்
சொலவடை
படைப்புகள்
முகப்பு
புறநானூறு | Purananooru
210. நினையாதிருத்தல் அரிது! பாடியவர்: பெருங்குன்றூர் கிழார். பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை. திணை: பாடாண்: துறை: பரிசில் கடாநிலை.
மன்பதை காக்கும்நின் புரைமை நோக்காது, அன்புகண் மாறிய அறனில் காட்சியடு, நும்ம னோரும்மற்று இனையர் ஆயின், எம்மனோர் இவண் பிறவலர் மாதோ; செயிர்தீர் கொள்கை எம்வெங் காதலி உயிர்சிறிது உடையள் ஆயின், எம்வயின் உள்ளாது இருத்தலோ அரிதே; அதனால், அறனில் கூற்றம் திறனின்று துணியப் பிறனா யினன்கொல்? இறீஇயர், என் உயிர்!` என நுவல்வுறு சிறுமையள் பலபுலந்து உறையும் இடுக்கண் மனையோள் தீரிய, இந்நிலை விடுத்தேன்; வாழியர், குருசில்! உதுக்காண்: அவல நெஞ்சமொடு செல்வல்: நிற் கறுத்தோர் அருங்கடி முனையரண் போலப் பெருங்கை யற்றஎன் புலம்புமுந் துறத்தே.
புறநானூறு > பாடல்: 210
தேடுக
This page reloads every 3 minutes with new random verse.
Next Random
முழுதும்
முன்
முகப்பு
Copy URL