தத்துவ மானது தன்வழி நின்றிடில் வித்தக னாகி விளங்கி யிருக்கலாம் பொய்த்துவ மாம்அவை போயிடும் அவ்வழி தத்துவம் ஆவது அகார எழுத்தே. 14
திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 4. மத்திய சாக்கிர அவத்தை > பாடல்: 2180
If Jiva can make Tattvas function his way, He a wise one shall be; Illumined in Knowledge Divine, False devotion no more shall be; The Tattva Supreme is the primal letter-sound.*
`மெய்` என்பன யாவும் ஒருவனது அறிவினுள்ளே அடங்கித் தோன்றுமாயின் அவன் ஏனையோர் பலரினும்திறம் மிக உடையனாய் விளங்கலாம். அப்பொழுது பயனில்லாத செயல்கள் யாவும் ஒழிந்து, பயனுள்ள செயல் கைவரும். அங்ஙனம் உணரப்படும் மெய்களில் நாதம் தலையாயது.