224. இறந்தோன் அவனே! பாடியவர்: கருங்குழல் ஆதனார். பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான். திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. அருப்பம் பேணாது அமர்கடந் ததூஉம்; துணைபுணர் ஆயமொடு தசும்புடன் தொலைச்சி, இரும்பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்; அறம்அறக் கணட நெறிமாண் அவையத்து, முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த பவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு, பருதி உருவின் பல்படைப் புரிசை, எருவை நுகர்ச்சி, யூப நெடுந்தூண், வேத வேள்வித் தொழில்முடித் ததூஉம்; அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்; இறந்தோன் தானே; அளித்துஇவ் வுலகம் அருவி மாறி, அஞ்சுவரக் கருகிப், பெருவறம் கூர்ந்த வேனிற் காலைப், பசித்த ஆயத்துப் பயன்நிரை தருமார், பூவாட் கோவலர் பூவுடன் உதிரக் கொய்துகட்டு அழித்த வேங்கையின், மெல்லியல் மகளிரும் இழைகளைந் தனரே.
புறநானூறு > பாடல்: 224 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL