Ξ
இலக்கியம்
திருமுறைகள்
இலக்கணம்
எண்
எழுத்து
மொழி
சொற்கட்டு
ஒலி பெயர்க்க
பா வகைகள்
சீர் பிரிக்க
கட்டளைக் கலித்துறை
வழிபாட்டுப் பாடல்கள்
தனிப்பாடல் திரட்டு
வாழ்வியல்
விடுகதைகள்
சொலவடை
படைப்புகள்
முகப்பு
புறநானூறு | Purananooru
246. பொய்கையும் தீயும் ஒன்றே! பாடியவர்: பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு திணை: பொதுவியல் துறை: ஆனந்தப் பையுள்
பல்சான் றீரே ; பல்சான் றீரே செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும், பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே; துணிவரிக் கொடுங்காய் வாள்போழ்ந் தட்ட காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது, அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம் வெள்என் சாந்தொடு புளிப்பெய்து அட்ட வேளை வெந்தை, வல்சி ஆகப், பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும் உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ; பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம் நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம் பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற வள்இதழ் அவிழ்ந்த தாமரை நள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!
புறநானூறு > பாடல்: 246
தேடுக
This page reloads every 3 minutes with new random verse.
Next Random
முழுதும்
முன்
முகப்பு
Copy URL