திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஆசாதியேல் அணைவ காரணம் என் முத்தி நிலை பேசாது அகவும் பிணி. | ஆசாதி யேலணைவ காரணமென் முத்திநிலை பேசா தகவும் பிணி. |
| பொருள் : ஆணவ மலம் ஆகிய குற்றம் உயிரிடத்தில் முதலில் இல்லாமல் இடையிலே ஒரு காலத்தில் வந்து பற்றியது எனில், அவ்வாறு வந்து பற்றுவதற்குக் காரணம் யாது? (காரணம் இன்றியே வந்து பற்றியது என்று சொன்னால்) உயிர் முத்தி பெற்ற நிலையிலும் அவ் வாணவம் காரணமின்றி வந்து பற்றும் என்றாகும். காரணம் வேண்டாதபோது எந்த நிலையிலும் எந்த நேரத்திலும் அது சொல்லாமலே வந்து பற்றும் என்றாகி, முத்தி என்பதே இல்லையாகி விடும். ஆதலால் ஆணவ மலம் இடையிலே வந்ததன்று. அஃது உயிர்களிடத்தில் தொன்று தொட்டே உள்ளது. | |