Ξ
இலக்கியம்
திருமுறைகள்
இலக்கணம்
எண்
எழுத்து
மொழி
சொற்கட்டு
ஒலி பெயர்க்க
பா வகைகள்
சீர் பிரிக்க
கட்டளைக் கலித்துறை
வழிபாட்டுப் பாடல்கள்
தனிப்பாடல் திரட்டு
வாழ்வியல்
விடுகதைகள்
சொலவடை
படைப்புகள்
முகப்பு
புறநானூறு | Purananooru
280. வழிநினைந்து இருத்தல் அரிதே! பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார் திணை: பொதுவியல் துறை: ஆந்தப் பையுள்
என்னை மார்பிற் புண்ணும் வெய்ய நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்; நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா; துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்; அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்; நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும் செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா; துடிய! பாண ! பாடுவல் விறலி! என்ஆ குவிர்கொல் ? அளியிர்; நுமக்கும் இவண் உறை வாழ்க்கையோ, அரிதே ! யானும் மண்ணுறு மழித்தலைத் , தெண்ணீர் வாரத், தொன்றுதாம் உடுத்த அம்பகைத் தெரியல் சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும் கழிகல மகளிர் போல, வழிநினைந்து இருத்தல், அதனினும் அரிதே!
புறநானூறு > பாடல்: 280
தேடுக
This page reloads every 3 minutes with new random verse.
Next Random
முழுதும்
முன்
முகப்பு
Copy URL