திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| விடிவு ஆம் அளவும் விளக்கு அனைய மாயை வடிவு ஆதி கன்மத்து வந்து. | விடிவா மளவும் விளக்கனைய மாயை வடிவாதி கன்மத்து வந்து. |
| பொருள் : மாயையினின்றும் உடம்பு முதலியவை தோன்றி உயிர்களைப் பொருந்துகின்றன. அவ்வாறு அவை வந்து பொருந்துவது அந்த அந்த உயிர்களின் வினைக்கு ஏற்பவேயாகும். ஆணவமாகிய இருள் நீங்கி விடிவு வரும் வரையிலும் மாயையின் காரியமாகிய இந்த உடம்பு முதலியவை உயிருக்கு விளக்குப் போல நின்று உதவுகின்றன. | |