தோன்றிய எல்லாம் துடைப்பன் அவனன்றி ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே. 4
திருமந்திரம் > முதல் தந்திரம் > 23 நடுவு நிலைமை > பாடல்: 323
What he creates, none but he destroys; On their devout heads, the just bore aloft his holy feet; Who chant the pure name with ardour And cling thereof, in the society of the just, they meet.
தோன்றிய பொருள்கள் அனைத்தையும் ஒடுக்கு பவன் சிவபெருமானே. அதனால் `அயன், அரி, அரன்` என்னும் பிறர் மூவரும் என்றும் அவனது ஆணையை ஏற்று நிற்பவரே. ஆதலின், அம் மூவர்க்கும் முதல்வனாகிய சிவபெருமானது திருப்பெயராகிய திருவைந்தெழுத்து மந்திரத்தையே, `மற்றுப் பற்றின்றிப்` (தி.7 ப.48 பா.1) பற்றி நிற்பவரே உண்மையாக நடுவு நிற்பவராவர்.