இன்புற நாடி இருவருஞ் ..சந்தித்துத் துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின் முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய தொன்புற நாடிநின் றோதலு மாமே
திருமந்திரம் > இரண்டாந் தந்திரம் > 14 கரு உற்பத்தி > பாடல்: 487
Seeking pleasure, the two met; In pasa's misery was it born and bred; And having grown to stature Grew to manhood here below; Well may it seek the Ancient One That before all worlds was.
ஒருவன், ஒருத்தி ஆகிய இருவர் தம்முள் இன்பம் நுகரவே விரும்பிக் கூட, துன்பத்திற்குக் காரணமான அவ்விருப் பத்தால் ஓர் உயிர் பிறந்து வளர்ந்தபின், அவ்வுயிர், தான் நிலத்தில் வந்து சேர்தற்கு முன்பு கருப்பையினுள் உள்ள துன்பத்தால் `விரைவில் வெளிப்படல் வேண்டும்` என்று விரும்பிப் பெரிதும் முயன்று வெளிப் பட்டுப் பிறந்த செய்தியைப் பின் அறிவுடையோர் அவ்வுயிரும் தம்போல அறிவைப் பெறுமாறு அதற்குச் சொல்லுதல் கூடுமோ!