திருமந்திரம் | Thirumanthiram

பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் .. மாண்டிடும்
சத்தியம் ..ஈது சதாநந்தி ஆணையே.

திருமந்திரம் > இரண்டாந் தந்திரம் > 22 குரு நிந்தை. > பாடல்: 532

The virtuous wife, devotee true, and Jnani Great
Those who have done exceeding harm to shock them
Their life and wealth will in a year disappear,
True this is,
Upon Holy Nandi, I swear.

கற்புடை மகளிர், சிவனடியார்கள் தத்துவ ஞானம் உடையவர்கள் இவர்களது மனம் வருந்தும்படி அவர்தம் நெறிக்கு அழிவு செய்தவரது செல்வமும், வாழ்நாளும் ஓராண்டுக்குள்ளே அழிந்தொழியும். இஃது, எங்கள் நந்தி பெருமான்மேல் ஆணையாக, உண்மை.
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, Apr 25, 2026