திருமந்திரம் | Thirumanthiram

பற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் .. நாவையும்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றா தொழிவது மாகமை யாமே.

திருமந்திரம் > இரண்டாந் தந்திரம் > 24 பொறையுடைமை. > பாடல்: 539

In the hearts of those who are firm of mind
Lie the (Varmamus) lizard of Yoga Vairagya
It lay besieging nose and tongue--(in Kesari Mudra)
In the troubled thought that knows but torture,
The only thing that stands still
Is devotional Patience Exceeding.

பற்றறாதவர் உள்ளத்தில் பல்லி ஒன்று உள்ளது; அஃது அவரது மூக்கையும், நாக்கையும் பற்றிக்கிடந்து, எந்த நேரமும், எவற்றையேனும் படபடவென்று சொல்லிக்கொண்டிருக்கின்றது. பற்றுக்களைத் துடைத்தவரது உள்ளத்திலோ பெரிய பொறுமை என்னும் நீர் வற்றாது நிறைந்து நிற்கின்றது.
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, Jun 27, 2026