நெஞ்சு விடு தூது | Nenju Vidu Thoothu

வந்திருக்க வல்லான் மதியாதார் வல்லரணஞ்
செந்தழலின் மூழ்கச் சிரித்தபிரான் - அந்தமிலா
வேத முடிவில் விளைவில் விளைவிலொளி
யாதி யமல நிமலனருட் - போத
அறிவிலறிவை யறியு மவர்கள்
குறியுள் புகுதுங் குணவ - னெறிகொள்
வெளியில் வெளியில் வெளியன் வெளியி
லொளொயி லொளொயி லொளியன் - ஒளியி
லளியி லளியி லளிய னளியில்
அளவி லளவி லளவன் - அளவிறந்து
நின்றா னனைத்து நிறைந்தா நினைப்பவர்பாற்
சென்றான் தெரியத் தெரியாதான் - குன்றா

நெஞ்சு விடு தூது > இறைவனது நிலை > பாடல்: 6

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sun, Apr 19, 2026