63. என்னாவது கொல்? பாடியவர்: பரணர். பாடப்பட்டோன்: சோழன் வேற்ப·றடக்கைப் பெருவிறற் கிள்ளி; சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன். குறிப்பு: இருவரும் பொருது களத்தில் வீழ்ந்த போது பாடியது. திணை: தும்பை. துறை : தொகை நிலை. எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி, விளைக்கும் வினையின்றிப் படைஒழிந் தனவே; விறற் புகழ் மாண்ட புரவி எல்லாம் மறத் தகை மைந்தரொடு ஆண்டுப்பட் டனவே; தேர்தர வந்த சான்றோர் எல்லாம், தோல் கண் மறைப்ப, ஒருங்கு மாய்ந்தனரே; விசித்து வினை மாண்ட மயிர்க்கண் முரசம், பொறுக்குநர் இன்மையின், இருந்துவிளிந் தனவே; சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென, வேந்தரும் பொருது, களத்து ஒழிந்தனர்; இனியே, என்னா வதுகொல் தானே; கழனி ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் பாசவல் முக்கித், தண்புனல் பாயும், யாணர் அறாஅ வைப்பின் காமர் கிடக்கை அவர் அகன்றலை நாடே?
புறநானூறு > பாடல்: 63 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL