திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam

நம்பிஅர சன்சொன்ன வார்த்தை கேளா
 நன்றுனதுபணி என்ன அருளால் உன்னித்
தும்பிமுகன் அடிபணிந்து மன்னன் இங்கு
 தொகுத்தனநீ அமுதுசெய வேண்டும் என்னக்
கம்பமதக் களிற்றுமுகத் தானும் அங்குக்
 கருத்தினுடன் நம்பியுரைக் கிசைந்து காட்ட
இம்பரினில் வந்தனநாற் சுத்திசெய்தே இருந்த
 எலாம் படைக்க அவன் ஏற்றல் செய்தான்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 8

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Fri, Jul 24, 2026