தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும் இத்துடன் வேறா இருந்து துதிசெயும் பத்திமை யால் இப் பயனறி யாரே. 4
திருமந்திரம் > பாயிரம் > 6 அவையடக்கம் > பாடல்: 98
At the foot of the Sacred Hills, the Rishis and Devas sat, Seeking Liberation's endless Bliss, Devoutly praising, yet knowing not, So this deep Mystery I here expound.
மன்னிய வாய்மொழியாகிய சிவாகமங்கள், வீடு பேற்றை அடைவதற்கு விரும்பியிருந்த முனிவரும், தேவரும் கருத் தொருமை கொண்டு உலகப் பயன் விரும்பும் மக்களை விடுத்துத் தனி இடத்திலிருந்து வேண்டிக்கொண்ட அன்பு காரணமாக இறைவன் உண்மை ஞானத்தைக் கயிலைத் தாழ்வரைக்கண் இருந்து உணர்த்தி யருளிய நூல்களாம். பக்குவம் இல்லாதோர் இவ்வுண்மையை அறிய மாட்டார்.