முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram | full |
| பாடல் எண் | பாடல் | Verse |
|---|---|---|
| 0 | ||
| 1 | கடவுள் வாழ்த்து. மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை முன்னம் படைத்த முதல்வனைப்-பின்னரும் ஆதிரையான் ஆதிரையான் என்றென் றயருமால் ஊர்திரைநீர் வேலி உலகு ! முத்தொள்ளாயிரம் > இறை > கடவுள் வாழ்த்து. > பாடல்: 1 | |
| 2 | அடைப்பும் திறப்பும் தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத் தேயத் திரிந்த குடுமியவே-ஆய்மலா வண்டுலா அங் கண்ணி வயமான்தேர்க் கோதையைக் கண்டுலாஅம் வீதிக் கதவு ! முத்தொள்ளாயிரம் > சேரன் > அடைப்பும் திறப்பும் > பாடல்: 2 | |
| 3 | இழந்தலும் பெற்றதும் வாமான்தேர்க் கோதையை மான்தேர்மேற் கண்டவர் மாமையே யன்றோ இழப்பது- மாமையிற் பன்னுாறு கோடி பழுதோ! என் மேனியிற் பொன்னுாறி யன்ன பசப்பு! முத்தொள்ளாயிரம் > சேரன் > இழந்தலும் பெற்றதும் > பாடல்: 3 | |
| 4 | முடிந்ததும் முடியாததும் கடற்றானைக் கோதையைக் காண்கொடாள் வீணில் அடைத்தாள் தனிக்கதவம் அன்னை-அடைக்குமேல் ஆயிழையாய்! என்னை அவன்மேல் எடுத்துரைப்பார் வாயும் அடைக்குமோ தான்! முத்தொள்ளாயிரம் > சேரன் > முடிந்ததும் முடியாததும் > பாடல்: 4 | |
| 5 | பழிக்காப்பு வரைபொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும் நிரைபொரு வேன்மாந்தைக் கோவே! - நிரை வளையார் தங்கோலம் வவ்வுதல் ஆமோ அவர் தாய்மார் செங்கோலன் அல்லன் என! முத்தொள்ளாயிரம் > சேரன் > பழிக்காப்பு > பாடல்: 5 | |
| 6 | கனவுப் புணர்ச்சி புன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை நன்னாகம் நின்றலரு நல்நாடன்-என் னாகம் கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான் என்கொல் இவரறிந்த வாறு! முத்தொள்ளாயிரம் > சேரன் > கனவுப் புணர்ச்சி > பாடல்: 6 | |
| 7 | நெஞ்சு விடு துாது கடும்பனித் திங்கள்தன் கைபோர்வை யாக நெடுங்கடை நின்றதுகொல் தோழி!-நெடுஞ்சினவேல் ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையை காணிய சென்றவென் நெஞ்சு! முத்தொள்ளாயிரம் > சேரன் > நெஞ்சு விடு துாது > பாடல்: 7 |
| பாடல் எண் | பாடல் | Verse |
|---|---|---|
| 8 | வருவதும் போவதும் ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக் காணிய சென்று கதவடைத்தேன்-நாணிப் பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல வருஞ்செல்லும் பேருமென் நெஞ்சு! முத்தொள்ளாயிரம் > சேரன் > வருவதும் போவதும் > பாடல்: 8 | |
| 9 | முத்தொள்ளாயிரம் > சேரன் > காணாப் பேச்சு > பாடல்: 9 | |
| 0 | முத்தொள்ளாயிரம் > சேரன் > காணாப் பேச்சு > பாடல்: 9 | |
| 10 | வஞ்சப் புகழ்ச்சி இவன்என் நலங்கவர்ந்த கள்வன் இவன் எனது நெஞ்சம் நிறையழித்த கள்வனென்று-அஞ்சொலாய்! சொல்லு நெறியெலாஞ் சேரலர்கோக் கோதைக்குச் சொல்லும் பழியோபெரிது! முத்தொள்ளாயிரம் > சேரன் > வஞ்சப் புகழ்ச்சி > பாடல்: 10 | |
| 1 | கடவுள் வாழ்த்து. மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை முன்னம் படைத்த முதல்வனைப்-பின்னரும் ஆதிரையான் ஆதிரையான் என்றென் றயருமால் ஊர்திரைநீர் வேலி உலகு ! முத்தொள்ளாயிரம் > இறை > கடவுள் வாழ்த்து. > பாடல்: 1 | |
| 11 | காதல் நோய் காராட் டுதிரம்துாய்உய் அன்னை களன்இழைத்து நீராட்டி நீங்கென்றால் நீங்குமோ! -போராட்டு வென்று களங்கொண்ட வெஞ்சினவேற் கோதேக்கென் நெஞ்சங் களங்கொண்டநோய்! முத்தொள்ளாயிரம் > சேரன் > காதல் நோய் > பாடல்: 11 | |
| 2 | உலக இயல்பு மல்லல்நீர் மாந்தையார் மாக்கடுங்கோக் காயினும் சொல்லவே வேண்டும் நமகுறை-நல்ல திலகங் கிடந்த திருநுதலாய் அஃதால் உலகங் கிடந்த இயல்பு! |