திருமந்திரம் | Thirumanthiram | full |
| பாடல் எண் | பாடல் | Verse |
|---|---|---|
| 0 | ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. திருமந்திரம் > 1 விநாயகர் காப்பு > பாடல்: 0 | He who has the five hands and the elephant's face, Whose tusk is even as the crescent moon, The son of Nandi, the Flower of Wisdom, Him I cherish in thought, His feet adore. |
| 1 | ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே. 1 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 1 | The One is He, the Two His sweet Grace, In Three He stood, in all the Four witnessed, The Five He conquered, the Six He filled, The Seven Worlds pervades, manifests the Eight And so remains. |
| 2 | போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம் கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே. 2 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 2 | The Holy One who all life sustains, Lord of Her, beloved of all the world, He who spurned Yama, the Southern Qrarter's King Of Him I sing, His glory and praise. |
| 3 | ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள் நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும் பக்கநின் றார்அறி யாத பரமனைப் புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே. 3 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 3 | He who stands the same to all, The Pure One, whom immortal Gods adore, Whom, even they, that daily stand beside, know not, Him I seek, praise, and meditate. |
| 4 | அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப் புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப் பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே. 4 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 4 | The Truth of Spaces Vast, Seek of the Universe orb, Our Haven of Refuge, He bade me seek and find, Him I praised by night and day, And praising thus, gloom{-}dispelled, I held firm in this world of strifes. |
| 5 | சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை அவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லை புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும் தவனச் சடைமுடித் தாமரை யானே. 5 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 5 | Search where ye will, there's no God like Siva, None here below to equal Him in glory; Lotus like, He, of gleaming matted locks, Golden in splendour, beyond the worlds, apart. |
| 6 | அவனை ஒழிய அமரரும் இல்லை அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே. 6 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 6 | Without Him, there be Celestials none, Without Him, penance is not, Without Him, naught the Three accomplish, Without Him, I know not the City's Gate. |
| 7 | முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன் தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன் தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன் பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே. 7 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 7 | Primal First is He, older than the Co-eval Three But the Lord is He peerless, unequalled; Call Him "Father," and Father He to thee, Inside you He flames in the Lotus of golden hue. |
| 8 | தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன் ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத் தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. 8 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 8 | Hotter is He than fire, cooler than water; And yet none knows of His Grace abounding; Purer than the child, kinder by far than the mother, Nearest to Love is He, of the flowing matted locks. |
| 9 | பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப் பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன் தன்னால் தொழப்படு வாரில்லை தானே. 9 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 9 | Gold-bewrought, His matted locks fall back and gleam; Nandi, His name, My Lord is He, ever by me worshipt; But none there be whom He worships. |
| 10 | தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும் தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும் தானே மழைபொழி தையலு மாய்நிற்கும் தானே தடவரை தண்கட லாமே. 10 திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 10 | Holding the worlds apart, as the Heavens high He spreads; Himself the scorching Fire, Sun and Moon, Himself the Mother that sends down the rains Himself the mountains strong and oceans cold. |