| பாடல் எண் | பாடல் | Verse |
மூவகைத் திருமேனி கொள்பவன்
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|
அருவும் உருவும் அறிஞர்க்கு அறிவாம் உருவம் உடையான் உளன். | அருவு முருவு மறிஞர்க் கறிவா முருவ முடையா னுளன். | | பொருள் : இறைவன் ஞானியர்க்கு அறிவே வடிவாய் விளங்குகின்றான். ஏனையோர்க்கு அருவம், உருவம், அரு வுருவம் என்னும் மூன்று திருமேனிகளை உடையவனாய் இருக்கின்றான். | திருவருட்பயன் > முதல் அதிகாரம் > 1. பதிமுது நிலை > பாடல்: 5
| | | 0 | 6 |
| 1 | அவனுக்கு மேலானதொரு பொருளில்லை
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|
பல் ஆர் உயிர் உணரும் பான்மை என மேல் ஒருவன் இல்லாதான் எங்கள் இறை. | பல்லா ருயிருணரும் பான்மையென மேலொருவ னில்லாதா னெங்க ளிறை. | | பொருள் : உயிர்கள் எண்ணற்றவை; அறியும் தன்மை உடையவை. ஆனால், அவை தாமே அறியமாட்டா; வேறொரு துணை அறிவிக்கவே அறிவன. அவ்வுயிர்களைப் போன்றவனல்லன் எம் இறைவன். அவன்தானே எல்லாவற்றையும் அறிபவன். தன்னை அறிவித்தற்குத் தனக்கு மேலாக ஒருவனை உடையவன் அல்லன். | திருவருட்பயன் > முதல் அதிகாரம் > 1. பதிமுது நிலை > பாடல்: 6
| |
| 7 | எங்கும் நிறைந்து நின்று இயக்குபவன்
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|
அகர உயிர் போல் அறிவாகி எங்கும் நிகரில் இறை நிற்கும் நிறைந்து. | அகர வுயிர்போ லறிவாகி யெங்கும் நிகரிலிறை நிற்கும் நிறைந்து. | | பொருள் : பதிப்பொருள் தனக்கு ஒப்பாக வேறு ஒரு பொருளும் இல்லாதது. அது பேரறிவாய் எங்கும் நீக்கமின்றி நிறைந்து நிற்கும். அகரமாகிய உயிரெழுத்து மற்றைய எல்லா எழுத்துக்களிலும் இயைந்து நின்று அவற்றை இயக்குவது போலப் பதிப்பொருள் பிற எல்லாப் பொருளிலும் வேற்றுமையின்றிக் கலந்து நின்று அவற்றை இயக்கும். எனவே பதியாகிய இறையே உலகிற்கு முதல் என்பது விளங்கும். | திருவருட்பயன் > முதல் அதிகாரம் > 1. பதிமுது நிலை > பாடல்: 1
| |
அடியவர் உள்ளத்தில் விளங்கி நிற்பவன்
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|
ஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு வான் நாடர் காணாத மன். | ஆனா வறிவா யகலா னடியவர்க்கு வானாடர் காணாத மன். | | பொருள் : தேவர்களாலும் அறியப்படாத தலைவனாகிய சிவபெருமான் தன்னையே நினைந்துருகும் அடியவரின் அறிவில் நீங்காத பேரறிவாய் நிறைந்து, அவரை விட்டு அகலாது இருப்பான். | திருவருட்பயன் > முதல் அதிகாரம் > 1. பதிமுது நிலை > பாடல்: 7
| | | 8 | சத்தியோடு கூடியவன்
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|
தன் நிலைமை மன் உயிர்கள் சாரத் தரும் சத்தி பின்னம் இலான் எங்கள் பிரான். | தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தருஞ்சத்தி பின்னமிலா னெங்கள் பிரான். | | பொருள் : ஒருவனாகிய எம் இறைவன் பிறப்பு இறப்பிற் படாமல் என்றும் ஒரு தன்மையனாய் உள்ளவன். அந்த நிலைமையைப் பலவாகிய உயிர்களும் பெறும்படியாகச் செய்யும் தனது சத்தியோடு அவன் வேறின்றி நிற்கிறான். | திருவருட்பயன் > முதல் அதிகாரம் > 1. பதிமுது நிலை > பாடல்: 8
| |
| 2 | திருவருட்பயன் > முதல் அதிகாரம் > 1. பதிமுது நிலை > பாடல்: 2
| |
| 3 | ஒப்பு இல்லாதவன்
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|
பெருமைக்கும் நுண்மைக்கும் பேர் அருட்கும் பேற்றின் அருமைக்கும் ஒப்பு இன்மையான். | பெருமைக்கும் நுண்மைக்கும் பேரருட்கும் பேற்றி னருமைக்கு மொப்பின்மை யான். | | பொருள் : எல்லாவற்றிலும் பெரிய பொருளாய் நிற்கும் தன்மையில் அவனை ஒப்பார் இல்லை. எல்லாப் பொருளிலும் உட்கலந்து நிறைந்து நிற்கும் நுண்மையில் அவனை ஒப்பார் இல்லை. எல்லாவுயிர்களிடத்திலும் கொண்டிருக்கும் மாறாத பெருங்கருணைத் திறத்தில் அவனை ஒப்பார் யாருளர்? பிறர் தன்னைப் பெறுவதற்கு அரியனாய் நிற்கும் நிலைமையிலும் அவன் ஒப்பார் இல்லாதவனே. இவ்வாறு பெருமை, நுண்மை, பேரருள், பெறுதற்கு அருமை ஆகிய இந்நான்கு திறத்திலும் தனக்கு ஒப்பாக வேறொன்று இல்லாத சிறப்பினை உடையவன் எம் இறைவன். | திருவருட்பயன் > முதல் அதிகாரம் > 1. பதிமுது நிலை > பாடல்: 3
| |
| 4 | முத்தொழில் செய்பவன்
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|
ஆக்கி எவையும் அளித்து ஆசுடன் அடங்கப் போக்கும் அவன் போகாப் புகல். | ஆக்கி யெவையு மளித்தா சுடனடங்கப் போக்குமவன் போகாப் புகல். | | பொருள் : இறைவன் உயிர்களிடம் உள்ள ஆணவ மலமாகிய அழுக்கினை நீக்க வேண்டியே அவ்வுயிர்களுக்கு உடம்பும், ஐம்பொறி முதலிய கருவிகளும், உலகும், உலகிலுள்ள நுகர்ச்சிப் பொருள்களும் ஆகிய எல்லாவற்றையும் படைத்துக் கொடுக்கின்றான்; உயிர்கள் குறித்த காலம் வரை அவற்றோடு பொருந்தி வாழும்படியாக அவற்றை நிலை நிறுத்தி காக்கின்றான்; பின், ஆணவ மலம் நீங்கும் நிலையை அடையும் காலத்தில் அம் மலத்தோடு சேர்த்து, தான் படைத்துக் காத்த உடம்பு முதலிய பொருள்களையும் ஒரு சேரப் போக்கி உயிரைத் தூய தாக்குகின்றான். இப்பேருதவியைச் செய்யும் இறைவனே உயிர்களுக்கு நீங்காத புகலிடம் ஆவான். | திருவருட்பயன் > முதல் அதிகாரம் > 1. பதிமுது நிலை > பாடல்: 4
| |
| 5 | மூவகைத் திருமேனி கொள்பவன்
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|
அருவும் உருவும் அறிஞர்க்கு அறிவாம் உருவம் உடையான் உளன். | அருவு முருவு மறிஞர்க் கறிவா முருவ முடையா னுளன். | | பொருள் : இறைவன் ஞானியர்க்கு அறிவே வடிவாய் விளங்குகின்றான். ஏனையோர்க்கு அருவம், உருவம், அரு வுருவம் என்னும் மூன்று திருமேனிகளை உடையவனாய் இருக்கின்றான். | திருவருட்பயன் > முதல் அதிகாரம் > 1. பதிமுது நிலை > பாடல்: 5
| |
| 6 | அவனுக்கு மேலானதொரு பொருளில்லை
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|
பல் ஆர் உயிர் உணரும் பான்மை என மேல் ஒருவன் இல்லாதான் எங்கள் இறை. | பல்லா ருயிருணரும் பான்மையென மேலொருவ னில்லாதா னெங்க ளிறை. | | பொருள் : உயிர்கள் எண்ணற்றவை; அறியும் தன்மை உடையவை. ஆனால், அவை தாமே அறியமாட்டா; வேறொரு துணை அறிவிக்கவே அறிவன. அவ்வுயிர்களைப் போன்றவனல்லன் எம் இறைவன். அவன்தானே எல்லாவற்றையும் அறிபவன். தன்னை அறிவித்தற்குத் தனக்கு மேலாக ஒருவனை உடையவன் அல்லன். | திருவருட்பயன் > முதல் அதிகாரம் > 1. பதிமுது நிலை > பாடல்: 6
| |
| 7 | அடியவர் உள்ளத்தில் விளங்கி நிற்பவன்
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|
ஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு வான் நாடர் காணாத மன். | ஆனா வறிவா யகலா னடியவர்க்கு வானாடர் காணாத மன். | | பொருள் : தேவர்களாலும் அறியப்படாத தலைவனாகிய சிவபெருமான் தன்னையே நினைந்துருகும் அடியவரின் அறிவில் நீங்காத பேரறிவாய் நிறைந்து, அவரை விட்டு அகலாது இருப்பான். | திருவருட்பயன் > முதல் அதிகாரம் > 1. பதிமுது நிலை > பாடல்: 7
| |
| 8 | கலந்து நிற்பினும் வேறாய் நிற்பவன்
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|
எங்கும் எவையும் எரி உறுநீர் போல் ஏகம் தங்கும் அவன் தானே தனி. check check | எங்கு மெவையு மெரியுறுநீர் போலேகந் தங்குமவன் றானே தனி. | | பொருள் : காய்ச்சிய நீரில் கலந்து நிற்கும் வெப்பம் போல இறைவன் எல்லா வுலகங்களிலும் எல்லா வுயிர்களிலும் ஒன்றாய்க் கலந்து நிற்கிறான். அதே நேரத்தில் அவன் அவற்றிற்கு வேறாய்த் தனித்தும் நிற்கிறான். | திருவருட்பயன் > முதல் அதிகாரம் > 1. பதிமுது நிலை > பாடல்: 8
| |
| 9 | சார்ந்தவர்க்கு இன்பம் தருபவன்
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|
நலம் இலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன் சலம் இலன் பேர் சங்கரன். | நலமில னண்ணார்க்கு நண்ணினர்க்கு னல்லன் சலமிலன் பேர்சங் கரன். | | பொருள் : இறைவன் தன்னை அடைந்தவர்க்கு இன்பத்தைத் தருபவன்; தன்னை அடையாதவர்க்கு இன்பத்தைத் தராதவன். இவ்வாறு ஒரு சாரார்க்கு மட்டும் நன்மை செய்வதனால் அவன் ஓர வஞ்சனை உடையவன் போ<லும் என்று எண்ணவேண்டா. அவன் என்றும் ஒருபால் கோடாதவன்; நடுவு நிலைமையன். எல்லாவுயிர்களுக்கும் தனது பேரின்பத்தை வழங்க வேண்டும் என்பதே அவனது திருக்குறிப்பாகும். அதுபற்றியே அவனுக்குச் சங்கரன் என்ற பெயர் வழங்குகிறது. சங்கரன் என்பதற்கு, எல்லா வுயிர்களுக்கும் இன்பத்தைச் செய்பவன் என்பது பொருள். சம்-இன்பம்; கரன்-செய்பவன். | திருவருட்பயன் > முதல் அதிகாரம் > 1. பதிமுது நிலை > பாடல்: 9
| |
| 10 | பிறவிக்கு மருந்து ஆவான்
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|
உன்னும் உளதையம் இலது உணர்வாய் ஓவாது மன்னு பவம் தீர்க்கு மருந்து. check check | உன்னுமுள தைய மிலதுணர்வா யோவாது மன்னுபவந் தீர்க்கு மருந்து. | | பொருள் : இடைவிடாது தொடர்ந்து பற்றி வருகின்ற பிறவியாகிய நோயைத் தீர்க்கும் மருந்து ஒன்று உள்ளது. அஃது உங்களிடமே உள்ளது. <உங்கள் அறிவினுள்ளே உள்ளது. அம் மருந்துதான் இறைவன். அவன் உளனா, இலனா என்று ஐயுற வேண்டுவதில்லை. அவனைப் புறத்தே தேடாமல், உமது அகத்தே நோக்கி உணர முற்படுங்கள். | திருவருட்பயன் > முதல் அதிகாரம் > 1. பதிமுது நிலை > பாடல்: 10
| |
| 11 | உயிர்களின் தொகை
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|
பிறந்த நாள் மேலும் பிறக்கும் நாள் போலும் துறந்தோர் இறப்போர் தொகை. | பிறந்தநாள் மேலும் பிறக்குநாள் போலுந் துறந்தோ ரிறப்போர் தொகை. | | பொருள் : இதுவரையில் பற்று நீங்கி முத்தி பெற்றவர்கள் எத்தனை பேர் என்பதை எண்ணிச் சொல்லுதல் முடியாது. இது, உலகம் தோன்றிய காலந்தொட்டு இது வரையில் வந்துபோன நாட்களை எண்ணிச் சொல்வது போல முடியாத செயல். அவ்வாறே, இனிமேல் பற்று நீங்கி முத்தி பெற இருப்பவர்களின் எண்ணிக்கையையும் சொல்லுதல் முடியாது. இதுவும், உலகம் முடியும் வரை இனி மேல் வர இருக்கின்ற நாட்களை எண்ணி அறிய முயல்வது போல முடியாத செயலேயாகும். | திருவருட்பயன் > இரண்டாம் அதிகாரம் > 2. உயிரவை நிலை > பாடல்: 11
| |
| 9 | | |
| 12 | பிறவிக்கு மருந்து ஆவான்
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|
உன்னும் உளதையம் இலது உணர்வாய் ஓவாது மன்னு பவம் தீர்க்கு மருந்து. check check | உன்னுமுள தைய மிலதுணர்வா யோவாது மன்னுபவந் தீர்க்கு மருந்து. | | பொருள் : இடைவிடாது தொடர்ந்து பற்றி வருகின்ற பிறவியாகிய நோயைத் தீர்க்கும் மருந்து ஒன்று உள்ளது. அஃது உங்களிடமே உள்ளது. <உங்கள் அறிவினுள்ளே உள்ளது. அம் மருந்துதான் இறைவன். அவன் உளனா, இலனா என்று ஐயுற வேண்டுவதில்லை. அவனைப் புறத்தே தேடாமல், உமது அகத்தே நோக்கி உணர முற்படுங்கள். |
|