நெஞ்சு விடு தூது | Nenju Vidu Thoothu | full |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| பல் மொழிகள் என் உணரும் பான்மை தெரியாத தன்மை இருளார் தந்தது. | பன்மொழிக ளென்னுணரும் பான்மை தெரியாத தன்மை யிருளார்தந் தது. |
| பொருள் : பல சொற்கள் எதற்கு? முடிவாகச் சொன்னால் உயிரினது அறியுந்தன்மையை விளங்க வொட்டாதபடி தடுப்பது இருளாகிய ஆணவ மலத்தின் செயலாகும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| இருள் இன்றேல் துன்பு என் உயிர் இயல் பேற் போக்கும் பொருள் உண்டேல் ஒன்றாகப் போம். | இருளின்றேல் துன்பென் னுயிரியல்பேற் போக்கும் பொருளுண்டே லொன்றாகப் போம். |
| பொருள் : ஆணவம் என்ற அக இருள் இல்லையாயின் உயிர்களுக்குத் துன்பம் உண்டாவதற்குக் காரணம் யாது? இந்த ஆணவம் உயிரின் குணம் என்றால், அதனைப் போக்கும் பொருளாகிய திருவருளால் அது கெடும் பொழுது, குணமாகிய அது கெடவே உயிரும் அதனோடு இல்லையாய் ஒழியும். ஆனால், முத்தி நிலையில் ஆணவம் மட்டுமே கெட, உயிர் அழியாதிருத்தலால் ஆணவம் உயிரின் குணமன்று. அஃது உயிருக்கு அநாதியே உள்ள குற்றம் என்பது புலனாகும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஆசாதியேல் அணைவ காரணம் என் முத்தி நிலை பேசாது அகவும் பிணி. | ஆசாதி யேலணைவ காரணமென் முத்திநிலை பேசா தகவும் பிணி. |
| பொருள் : ஆணவ மலம் ஆகிய குற்றம் உயிரிடத்தில் முதலில் இல்லாமல் இடையிலே ஒரு காலத்தில் வந்து பற்றியது எனில், அவ்வாறு வந்து பற்றுவதற்குக் காரணம் யாது? (காரணம் இன்றியே வந்து பற்றியது என்று சொன்னால்) உயிர் முத்தி பெற்ற நிலையிலும் அவ் வாணவம் காரணமின்றி வந்து பற்றும் என்றாகும். காரணம் வேண்டாதபோது எந்த நிலையிலும் எந்த நேரத்திலும் அது சொல்லாமலே வந்து பற்றும் என்றாகி, முத்தி என்பதே இல்லையாகி விடும். ஆதலால் ஆணவ மலம் இடையிலே வந்ததன்று. அஃது உயிர்களிடத்தில் தொன்று தொட்டே உள்ளது. | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஒன்றும் மிகினும் ஒளி கவராதேல் உள்ளம் என்றும் அகலாது இருள். | ஒன்று மிகினு மொளிகவரா தேலுள்ள மென்று மகலா திருள். |
| பொருள் : உயிரிடத்தில் ஆணவ இருள் இப்பொழுது மிகுந்திருந்தாலும் உயிர் திருவருள் ஒளியைச் சிறிது சிறிதாகப் பெற்று அந்த ஆணவ இருளைப் படிப்படியாக நீக்கிக் கொள்ளும். அங்ஙனம் இறைவனது திருவருள் ஒளியை உயிர் உணரவில்லை என்றால் ஆணவ இருளினின்றும் அஃது என்றுமே விடுபடாது போகும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| விடிவு ஆம் அளவும் விளக்கு அனைய மாயை வடிவு ஆதி கன்மத்து வந்து. | விடிவா மளவும் விளக்கனைய மாயை வடிவாதி கன்மத்து வந்து. |
| பொருள் : மாயையினின்றும் உடம்பு முதலியவை தோன்றி உயிர்களைப் பொருந்துகின்றன. அவ்வாறு அவை வந்து பொருந்துவது அந்த அந்த உயிர்களின் வினைக்கு ஏற்பவேயாகும். ஆணவமாகிய இருள் நீங்கி விடிவு வரும் வரையிலும் மாயையின் காரியமாகிய இந்த உடம்பு முதலியவை உயிருக்கு விளக்குப் போல நின்று உதவுகின்றன. | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| அருளில் பெரியது அகிலத்தில் வேண்டும் பொருளிள் தலை இலது போல். | அருளிற் பெரிய தகிலத்தில் வேண்டும் பொருளிற் றலையிலது போல். |
| பொருள் : உலகியலில் ஒருவன் ஒரு சமயத்தில் ஒரு பொருளைத் தனக்கு இன்றியமையாததாகக் கருதி விடுவானாயின் அவனுக்கு அந்தச் சமயத்தில் அந்தப் பொருள்தான் மிக உயர்ந்த பொருளாகத் தோன்றும். அதனைக் காட்டிலும் மேலான பொருள் வேறொன்றும் இருக்க முடியாது. அதுபோல ஆன்மீக நெறியிற் செல்லும் ஒருவன் திருவருளையே தனக்கு இன்றியமையாத பொருளாகக் கருதி அதனையே வேண்டி நிற்பான். அவனைப் பொறுத்தவரையில் திருவருளைக் காட்டிலும் மேலான பொருள் இவ்வுலகில் வேறொன்றும் இல்லை. | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| பெருக்க நுகர்வினை பேர் ஒளியாய் எங்கும் அருக்கன் என நிற்கும் அருள். | பெருக்க நுகர்வினை பேரொளியா யெங்கு மருக்கனென நிற்கு மருள். |
| பொருள் : உலக மக்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவாய் ஈட்டவும், பின் நுகரவும் துணை புரிந்து நிற்கும் சூரியன் பேரொளியாய் எங்கும் பரவி நிற்றல் போல, இறைவனது திருவருட் சத்தி உயிர்கள் நல்வினை தீவினைகளைச் செய்து புண்ணிய பாவங்களை ஈட்டவும் அவற்றின் பயன்களாகிய இன்ப துன்பங்களை நுகரவும் துணை செய்து பேரறிவாய் எங்கும் நிறைந்து நிற்கும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஊன் அறியாது என்றும் உயிர் அறியாதது ஒன்றும் இவை தான் அறியாது ஆர் அறிவார் தான். | ஊனறியா தென்று முயிரறியா தொன்றுமிவை தானறியா தாரறிவார் தான். |
| பொருள் : உடம்பு சடம். அதற்கு எக்காலத்திலும் அறிவு இல்லை. ஆகவே அது தனக்குரிய உயிரை அறிந்து சென்று சேர மாட்டாது. உயிரும் இருள் மலத்தால் மூடப் பெற்று அறிவிழந்து நிற்கிறது. ஆகவே அதுவும் தனக்குரிய உடம்பை அறிந்து எடுத்துக் கொள்ளாது. அப்படியானால் இந்த உயிர் இன்ன உடம்பைப் பெறுதற்குரியது என்று அறிந்து கூட்டுவிப்பது எது? இவ்விரண்டையும் கூட்டிச் செயற்படுத்துவது திருவருளே யாகும். திருவருள் கூட்டுவிக்காமல் வேறு யார் அறிந்து கூட்டுவிக்க முடியும்? | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| பால் ஆழி மீன் ஆளும் பான்மைத்து அருள் உயிர்கள் மால் ஆழி ஆளும் மறித்து. | பாலாழி மீனாளும் பான்மைத் தருளுயிர்கள் மாலாழி யாளு மறித்து. |
| பொருள் : அருளை ஆதாரமாகக் கொண்டுள்ள உயிர்கள் அவ் வருளைப் பொருந்தி நின்று பேரின்பத்தை நுகர அறியாமல், மாயையின் காரியமாகிய உலகப் பொருள்களையே நுகர விரும்பி மயக்கமாகிய கடலில் ஆழ்ந்து போய் உள்ளன. இது, பாற்கடலில் உள்ள மீன்கள் அப்பாலை உண்ணும் பொருள் என்று அறியாமல் அங்குள்ள சிற்றுயிர்களைப் பிடித்து உண்ணும் நிலையைப் போன்றது. | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| அணுகு துணை அறியா ஆற்றோனில் ஐந்தும் உணர்வை உணராது உயிர். | அணுகு துணையறியா வாற்றோனி லைந்து முணர்வை யுணரா துயிர். |
| பொருள் : தனக்குப் பின்னே துணையாக வருகின்றவனை அறியாது தனி வழியில் அச்சத்துடன் நடந்து செல்லு<ம் வழிப்போக்கனைப் போல உயிர்கள் தமக்குத் தோன்றாத் துணையாய் பின்நின்று உதவும் பேரறிவாகிய திருவருளை உணராது துன்புறும். மற்றுமோர் உவமை கூறலாம். உயிர் உடன் நின்று செலுத்தவே ஐம்பொறிகள் செயற்படுகின்றன. ஆனால், அவ்வாறு தம்மைச் செலுத்தி நிற்கும் உயிரை அவை அறிவதில்லை. அந்த ஐம்பொறிகளைப் போல உயிர்கள் தமது அறிவிற்குத் துணையாய் உள்ள திருவருளை உணராது நிற்கும்.< | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| தரையை அறியாது தாமே திரிவோர் புரையை உணரார் புவி. | தரையை யறியாது தாமே திரிவோர் புரையை யுணரார் புவி. |
| பொருள் : நிலமே எல்லாவற்றிற்கும் ஆதாரமாய் இருந்து அனைத்தையும் தாங்கி நிற்கிறது. ஆயினும் மாந்தர் தம்மைத் தாங்கி நிற்பது நிலம் என்பதனைச் சிறிதும் நினைத்துப் பார்ப்பதில்லை. நிலத்தின் உதவியை அறவே மறந்து தாமே தமக்கு ஆதாரம் என்று எண்ணித் திரிவர். அதுபோலத் திருவருள்தான் தம்மைத் தாங்கி நின்று நடத்துகிறது என்பதனைச் சிறிதும் உணராமல் உயிர்கள் இவ்வுலகில் வாழ்கின்றன. | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| மலை கெடுத்தோர் மண் கெடுத்தோர் வான் கெடுத்தோர் ஞானம் தலை கெடுத்தோர் தன் கேடர் தாம். | மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெடுத்தோர் ஞானந் தலைகெடுத்தோர் தற்கேடர் தாம். |
| பொருள் : திருவருள் உணர்வை இழந்தவர் மலையை இழந்தவரோடு ஒப்பர்; நிலத்தை இழந்தவரோடு ஒப்பர்; வானை இழந்தவரோடு ஒப்பர். அவர் தமக்குத் தாமே கேடு செய்து கொள்பவர் ஆவார். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| வெள்ளத்துள் நா வற்றி எங்கும் விடிந்து இருளாம் கள்ளத் தலைவர் கடன். | வெள்ளத்துள் நாவற்றி யெங்கும் விடிந்திருளாங் கள்ளத் தலைவர் கடன். |
| பொருள் : எங்கும் நிறைந்துள்ள திருவருள் இடத்திலேதான் எல்லா உயிர்களும் உள்ளன. ஆயினும் பொய்த் தலைவராகிய அந்த உயிர்கள் திருவருளால் வரும் பேரின்பத்தை நுகராமல் துன்புறுகின்றன. உயிர்களது இந்த நிலை, நல்ல நீர்ப் பெருக்கிலே நின்று கொண்டு ஒருவன் நீர் வேட்கையால் நா வறண்டு நிற்பதைப் போன்றது ஆகும். இதற்கு இன்னொரு உவமையும் கூறலாம். பொழுது விடிந்த பின்னும் அதனை உணராமல், இருள்வயப்பட்டு உறங்கிக் கிடப்பதைப் போன்றது திருவருளை உணராத நிலை என்றும் கூறலாம். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| பரப்பு அமைந்து கேண்மின் இது பால் கலன் மேல் பூசை கரப்பு அருந்த நாடும் கடன். | பரப்பமைந்து கேண்மினிது பாற்கலன்மேற் பூசை கரப்பருந்த நாடுங் கடன். |
| பொருள் : உலகப் பொருள்களின் மேல் பரந்து ஓடுகின்ற மனத்தை ஒரு நெறிப்படுத்தியாம் கூறுவதைக் கேளுங்கள். திருவருளை மறந்து உலகப் பொருள்களில் கிடைக்கும் அற்ப சுகத்தைப் பெறுதற்கு நீங்கள் விரைகிறீர்கள். இந்த விரைவு எது போன்றது எனில், பால் நிறைந்த கலத்தின் மேல் ஏறி அமர்ந்த பூனை அந்த பாலைப் பருக நினையாமல், சற்றுத் தொலைவில் காணப்படும் கரப்பான் என்னும் பூச்சியைப் பிடித்து உண்ணுதற்குக் கருதும் முறைமை போன்றதாகும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| இற்றை வரை இயைந்தும் ஏதும் பழக்கம் இலா வெற்று உயிர்க்கு வீடு மிகை. | இற்றை வரையியைந்து மேதும் பழக்கமிலா வெற்றுயிர்க்கு வீடு மிகை. |
| பொருள் : உயிர் அன்று தொட்டு இன்று வரையிலும் திருவருளோடு தான் கூடியிருக்கிறது. ஆயினும் அத்திருவருளைத் தெரிந்து கொள்ளாமல் அதனோடு சிறிதேனும் பழகுதல் இல்லாமல் இருக்கிறதே. இப்படிப் பயனின்றி வாழ்கின்ற இந்த உயிருக்கு வீடு பெற என்ன தகுதி இருக்கிறது? | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| அறியாமை உள் நின்று அளித்ததே காணும் குறியாக நீங்காத கோ. | அறியாமை யுள்நின் றளித்ததே காணுங் குறியாக நீங்காத கோ. |
| பொருள் : உயிர் பக்குவம் உறாதநிலையில் இறைவன் அவ்வுயிரின் உள்ளாக மறைந்து நின்று அவ்வுயிர் அறியாதபடி அதன் அறிவைச் சிறிது சிறிதாக வளர்த்து வருவான். அவ்வுயிர் உண்மையை உணர்ந்து கொள்ளும் பக்குவம் எய்திய பொழுது அவ்விறைவனே கண்ணால் காணும் வடிவினையுடைய ஞானாசிரியனாய்த் தோன்றி வந்து அப்பக்குவ ஆன்மாவுக்குத் திருவருளைத் தெளிய உணர்த்துவான். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| அகத்து உறு நோயக்கு உள்ளினர் அன்றி அதனைச் சகத்தவருங் காண்பரோ தான். | அகத்துறுநோயக் குள்ளின ரன்றி யதனைச் சகத்தவருங் காண்பரோ தான். |
| பொருள் : வீட்டில் ஒருவர் நோயுற்றால் அவரது நோயின் தன்மையை அவ்வீட்டினுள் உள்ளவரே அறிவார். வெளியில் உள்ள பிறர் அதனை அறிவாரோ? அறியமாட்டார். அதுபோல, உயிரிடத்துப் பொருந்திய அறியாமையாகிய நோயினது நிலையை உயிரினுள் இருப்பவனாகிய இறைவனே அறிய வல்லான். உலகத்தவராகிய பிறர் அதனை எங்ஙனம் அறிதல் இயலும்? | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| அருளா வகையால் அருள் புரிய வந்த பொருள் அர் அறிவார் புவி. | அருளா வகையா லருள்புரிய வந்த பொருளா ரறிவார் புவி. |
| பொருள் : சிவமாகிய முதற்பொருளே நேர் நின்று அருளாமல் குரு வடிவில் மறைந்து நின்று அருள் செய்ய நினைந்து இவ்வாறு வந்திருக்கிறது என்பதை உலகத்தார் உணரமாட்டார்கள். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| பொய் இருண்ட சிந்தைப் பொறி இலார் போதம் ஆம் மெய் இரண்டுங் காணார் மிக. | பொய்யிருண்ட சிந்தைப் பொறியிலார் போதமாம் மெய்யிரண்டுங் காணார் மிக. |
| பொருள் : ஆணவ மலமறைப்பினால் இருண்ட அறிவினையுடைய, பக்குவம் இல்லாத மாந்தர் ஞானமாகிய அருளையும் அறியார். அந்த அருளின் வடிவாகிய ஞானகுருவின் நிலையையும் அறியார். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| பார்வை என மாக்களை முன் பற்றிப் பிடித்தற்காம் போர்வை எனக் காணார் புவி. | பார்வையென மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம் போர்வையெனக் காணார் புவி. |
| பொருள் : பழகிய விலங்கைக் காட்டிக் காட்டு விலங்குகளைக் கைப்பற்றுவதுபோல, இறைவன் நம்மைப் போல் இருப்பவராகிய ஞான குருவைக் கொண்டு பக்குவ ஆன்மாக்களை வயப்படுத்தி ஆட்கொள்ளுகிறான். இறைவன் தன்னை மறைத்துக் கொண்டு வரும் போர்வையே குருவடிவம் என்ற உண்மையை உலகத்தார் உணர மாட்டார். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| எமக்கு என் எவனுக்கு எவை தெரியும் அவ் அவ் தமக்கு அவனை வேண்டத் தவிர். | எமக்கென் னெவனுக் கெவைதெரியு மவ்வத் தமக்கவனை வேண்டத் தவிர். |
| பொருள் : எந்த ஒருவனுக்கு எந்தக் கலை தெரியுமோ அந்தக் கலையை அறிந்து கொள்வதற்கு அந்த ஒருவனது துணையையே நாட வேண்டியுள்ளது. அப்படியிருக்க, ஞானமாகிய அரிய பொருளை அறிய விரும்பும் நாம் அந்த ஞானத்தை உணர்த்தும் வல்லமையுடைய ஞானாசிரியரின் துணையை அல்லவா நாட வேண்டும்? அப்படிச் செய்யாமல், ஞானாசிரியரின் துணை இல்லாமலே ஞானத்தைப் பெறலாம் என்று கருதுவது பேதமையாகும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| விடம் நகிலம் மேவினும் மெய்ப் பாவகனின் மீளுங் கடனில் இருள் போவது இவன் கண். | விடநகிலம் மேவினுமெய்ப் பாவகனின் மீளுங் கடனிலிருள் போவதிவன் கண். |
| பொருள் : பாம்பு கடித்து ஏறிய நஞ்சானது, பாம்புக்குப் பகையாகிய கீரியே வந்து கடிபட்டவன் உடல் மீது விழுந்து புரண்டாலும் நீங்காது. ஆயின், மாந்திரிகன் ஒருவன் மந்திரத்தால் தன்னைக் கீரியாகப் பாவித்து அந்த மந்திர வடிவேயாக நின்று பார்க்கும் பார்வையினால் அந்தவிடம் நீங்குவதாகும். உயிரில் உள்ள மலமாகிய இருள் நீங்குவதும் இம்முறைமையில் ஆகும். இறைவன் உயிர்க்கு உயிராக உடன் நின்ற போதிலும் <உயிரிலுள்ள ஆணவ மலம் நீங்குவதில்லை. இறைவனாய் நிற்கும் ஞான குருவின் திருநோக்கத்தாலேயே அது நீங்குவதாகும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| அகலத் தரும் அருளை ஆக்கும் வினை நீக்குஞ் சகலர்க்கு வந்து அருளும் காண். | அகலத் தருமருளை யாக்கும் வினைநீக்குஞ் சகலர்க்கு வந்தருளுங் காண். |
| பொருள் : இறைவன் விஞ்ஞானகலர் ஆகிய உயிர்களுக்கு உள்ளிருந்தே ஞானத்தை உணர்த்துவான்; பிரளயாகலர் ஆகிய உயிர்களுக்குத் தெய்வ வடிவில் முன்தோன்றி அவரைப் பிணித்துள்ள வினையை நீக்கி ஞானத்தை அருள்வான். சகலர் ஆகிய உயிர்களுக்கு ஆசிரியர் வடிவில் வந்து அஞ்ஞானத்தைப் போக்கி மெய்ஞ்ஞானத்தை அருள்வான். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஆர் அறிவார் எல்லாம் அகன்ற நெறி அருளும் பேர் அறிவான் வாராத பின். | ஆரறிவா ரெல்லா மகன்ற நெறியருளும் பேரறிவான் வாராத பின். |
| பொருள் : ஆசை முதலிய குற்றங்களை யெல்லாம் அகன்றொழியச் செய்வது ஞானம். அப்படிப்பட்ட ஞானத்தைத் தர வல்லவன் முற்றறிவினை உடைய இறைவன் ஒருவனே. அவன் குருவாய் வந்து உணர்த்தாவிடின் மெய்யுணர்வாகிய ஞானத்தை யார்தாம் உணரமுடியும்? | |
| பாடல் எண் | பாடல் | Verse | அருட் குரு இன்றி ஞானம் வரும்!
திருவருட்பயன் > ஐந்தாம் அதிகாரம் > 5. அருளுறு நிலை > பாடல்: 50 | |||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 0 | ||||||||||||||
| 51 | அறியும் நெறிக்கு உரியவர்
திருவருட்பயன் > ஆறாம் அதிகாரம் > 6. அறியும் நெறி > பாடல்: 51 | |||||||||||||
| 1 | பூமேவு முந்திப் புயல்வண்ணன் பொற்பமைந்த நாமேவு மாதுபுணர் நான்முகத்தோன் - றாமேவிப் பன்றியு மன்னமுமாய்ப் பாரிடத்தும் வான்பறந்து மென்று மறியா வியல்பினா - னன்றியும் இந்திரனும் வானோரு மேனோரு மெப்புவியு மந்தர வெற்பு மறிகடலு - மந்திரமும் வேதமும் வேத முடிவும்விளை விந்துவுடன் நாதமுங் காணா நலத்தினா - னோத வரியா னெளியா நளவிறந்து நின்ற பெரியான் சிறியான்பெண் பாகன் - தெரியா வருவா னுருவா னருவுருவு மில்லான் மரியான் மரிப்பார் மனத்தான் - பரிவான மெய்யர்க்கு மெய்யன் வினைக்குவினை யாயினான் பொய்யர்க்குப் பொய்யாப்பொய் யாயினா - னையன் படநாகம் பூண்ட பரமன் பசுவின் இடமாய் நிறைந்த விறைவன் - சுடரொளியான் நெஞ்சு விடு தூது > இறைவனியல்பு > பாடல்: 1 | |||||||||||||
| 2 | ||||||||||||||
| 52 | நித்தப் பொருள்கள்ஆறு
திருவருட்பயன் > ஆறாம் அதிகாரம் > 6. அறியும் நெறி > பாடல்: 52 | நித்தப் பொருள்கள்ஆறு
திருவருட்பயன் > ஆறாம் அதிகாரம் > 6. அறியும் நெறி > பாடல்: 52 | ||||||||||||
| 3 | கொண்டதொரு காமனுக்கும் கோபனுக்கும் மோகனுக்கும் மண்டு மதமாச் சரியனுக்கும் - திண்டிறல்சேர் இந்திரியம் பத்துக்கு மீரைந்து மாத்திரைக்கும் அந்தமிலாப் பூதங்க ளைந்தினுக்கும் - சிந்தைகவர் மூன்றுகுற்ற மூன்றுகுணம் மூன்றுமலம் மூன்றவத்தை யேன்றுநின்று செய்யு மிருவினைக்குந் - தோன்றாத வாயுவொரு பத்துக்கும் மாறாத வல்வினையே யாய கிளைக்கு மருநிதிக்கும் - நேயமாம் நெஞ்சு விடு தூது > தளையினியல்பு > பாடல்: 3 | |||||||||||||
| 53 | பொருள்கள் தம்மில் இயைந்து நிற்றல்
திருவருட்பயன் > ஆறாம் அதிகாரம் > 6. அறியும் நெறி > பாடல்: 53 | |||||||||||||
| 54 | உயிர் அருளோடு சேர்ந்து வாழும் ஒற்றுமை
திருவருட்பயன் > ஆறாம் அதிகாரம் > 6. அறியும் நெறி > பாடல்: 54 | |||||||||||||
| 4 | ||||||||||||||
| 55 | இச்சை கிரியை யிவைதரித்திங் கெண்ணிலா வச்சங் கொடுமை யவைபூண்டு - கச்சரவன் சீரினிலை நில்லாமல் திண்டாடும் பல்கருவி வாரியகப் பட்டு மயங்கினேன் - தேருங்கால் உன்னை யொழிய வுறவில்லை யென்னுமது தன்னை யறிவைத் தனியறிவை - முன்னந் தலைப்பட்டார் மற்றை யவரென்று - நிலைத்தமிழின் தெய்வப் புலமைத் திருவள் ளுவருரைத்த மெய்வைத்த சொல்லை விரும்பாமல் - ஐவர்க்கு நெஞ்சு விடு தூது > தளையினியல்பு > பாடல்: 4 | பளிங்கிற்குப் பகலவன் போல உயிர்கட்குத் திருவருள்
திருவருட்பயன் > ஆறாம் அதிகாரம் > 6. அறியும் நெறி > பாடல்: 55 | ||||||||||||
| 5 | மாவதுவே செய்தங் கவர்வழியைத் தப்பாமல் பாவமெனும் பௌவப்பரப்பழுந்திப் - பூவையர்தம் கண்வலையிற் பட்டுக் கலவிக் கலைபயின்றங் குண்மை யறிவுணர்ச்சி யோராமல் - திண்மையினால் நாவிற் கொடுமை பலபிதற்றி நாடோ றும் சாவிற் பிறப்பிற் றலைப்பட்டிங் - காவிநிலை நிற்கும்வகை பாராய் நிலையான நெஞ்சமே பொற்பினுடன் யானே புகலக்கேள் - வெற்பின்மிசை நெஞ்சு விடு தூது > தளையினியல்பு > பாடல்: 5 | |||||||||||||
| 6 | ||||||||||||||
| 56 | வந்திருக்க வல்லான் மதியாதார் வல்லரணஞ் செந்தழலின் மூழ்கச் சிரித்தபிரான் - அந்தமிலா வேத முடிவில் விளைவில் விளைவிலொளி யாதி யமல நிமலனருட் - போத அறிவிலறிவை யறியு மவர்கள் குறியுள் புகுதுங் குணவ - னெறிகொள் வெளியில் வெளியில் வெளியன் வெளியி லொளொயி லொளொயி லொளியன் - ஒளியி லளியி லளியி லளிய னளியில் அளவி லளவி லளவன் - அளவிறந்து நின்றா னனைத்து நிறைந்தா நினைப்பவர்பாற் சென்றான் தெரியத் தெரியாதான் - குன்றா நெஞ்சு விடு தூது > இறைவனது நிலை > பாடல்: 6 | |||||||||||||
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| கண் தொல்லை காணும் நெறி கண் உயிர் நாப்பண் நிலை உண்டு இல்லை அல்லது ஒளி. | கண்டொல்லை காணுநெறி கண்ணுயிர் நாப்பண்ணிலை யுண்டில்லை யல்ல தொளி. |
| பொருள் : கண் தொன்று தொட்டுப் பொருளைக் கண்டு வரும் முறைமை, கண்ணிற்கும் உயிருக்கும் இடையே ஒளி நிற்பதனால் உண்டாகின்றது. அவ்வாறு ஒளி நில்லாவிடில் கண் பொருளைக் காணுதல் என்பது நிகழாது. | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| புன் செயலினோடு புலன் செயல் போல் நின் செயலை மன் செயலதாக மதி. | புன்செயலி னோடு புலன்செயல்போல் நின்செயலை மன்செயல தாக மதி. |
| பொருள் : சிற்றின்பப் பொருள்களின் மேல் விரைந்து செல்லுகின்ற ஐம்பொறிகளின் செயல், உண்மையில், அப்பொறிகளைச் செலுத்துகின்ற உயிரின் செயலேயாகும். அதுபோல, மாணவனே, நீ செய்யும் செயல்கள் யாவும் உனக்கு முதலாகிய திருவருளின் செயல் என்றே அறிவாயாக. | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| களியே மிகு புலமாய்க் கருதி ஞான ஒளியே ஒளியாய் ஒளி. | களியே மிகுபுல மாய்க்கருதி ஞான வொளியே வொளியா வொளி. |
| பொருள் : ஞானமாகிய அருள் வழியாக உண்டாகும் இன்பத்தையே அடையத்தக்க மேலான பேரின்பமாக உணர்ந்து, அத்திருவருள் ஞானத்தையே பற்றாகப் பற்றி நின்று, அந்த ஞான ஒளிக்குள் புகுந்து நீ ஒளிந்து நிற்பாயாக. | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| கண்டபடியே கண்டு காணாமை காணாமல் கொண்டபடியே கொண்டு இரு. | கண்டபடி யேகண்டு காணாமை காணாமற் கொண்டபடி யேகொண் டிரு. |
| பொருள் : மாணாக்கனே, அறியாமையாகிய கேவலம் வந்து பொருந்தாதவாறு, கருவிகளை உனக்கு வேறாகக் கண்டு நீங்கித் திருவருள் ஞானத்தைப் பற்றி நின்றாய். பின்னும் அவ்வாறு அதனையே விடாது பற்றி நிற்பாயாக. அவ்வாறு நின்றால் அத்திருவருள் உன்னைத் தன்னிடத்து அடக்கிக் கொள்ளும். அது உன்னை விழுங்கிக் கொள்ளுமாறு அதற்கு இசைந்த நிலையினையே நீயும் மேற்கொண்டிரு. | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| கண்டபடியே கண்டு காணாமை காணாமல் கொண்டபடியே கொண்டு இரு. | கண்டபடி யேகண்டு காணாமை காணாமற் கொண்டபடி யேகொண் டிரு. |
| பொருள் : மாணாக்கனே, அறியாமையாகிய கேவலம் வந்து பொருந்தாதவாறு, கருவிகளை உனக்கு வேறாகக் கண்டு நீங்கித் திருவருள் ஞானத்தைப் பற்றி நின்றாய். பின்னும் அவ்வாறு அதனையே விடாது பற்றி நிற்பாயாக. அவ்வாறு நின்றால் அத்திருவருள் உன்னைத் தன்னிடத்து அடக்கிக் கொள்ளும். அது உன்னை விழுங்கிக் கொள்ளுமாறு அதற்கு இசைந்த நிலையினையே நீயும் மேற்கொண்டிரு. | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| தூ நிழல் அர்தற்கு ஆரும் சொல்லார் தொகும் இது போல் தான் அதுவாய் நிற்கும் தரம். | தூனிழலார் தற்காருஞ் சொல்லார் தொகுமிதுபோல் தானதுவாய் நிற்குந் தரம். |
| பொருள் : வெயிலில் அலைந்து வருந்தியவன் குளிர்ந்த நிழலை உடைய இடத்தைக் கண்டால் பிறர் சொல்லாதிருக்கவும் தானே அவ்விடத்தை அடைந்து நிழலில் அடங்கி நின்று இன்புறுவான். அதுபோல, அறியும் நெறியால் திருவருளை உணர்ந்த உயிர் தான் வேறாய் நில்லாமல் அத்திருவருளோடு ஒன்றுபட்டு அதனுள் அடங்கி அதுவேயாய் நிற்கும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| தித்திக்கும் பால் தானும் கைக்குந் திருந்திடும் நாப் பித்தத்தில் தான் தவிர்ந்த பின். | தித்திக்கும் பாடானுங் கைக்குந் திருந்திடுநாப் பித்தத்தி டான்டவிர்ந்த பின். |
| பொருள் : பால் தித்திப்பாக இருப்பது அதன் இயற்கை. அந்த இயற்கைக்கு மாறாகப் பால் கசப்பது நாவில் சேர்ந்த பித்தம் என்னும் செயற்கையினால் ஆகும். பித்தமாகிய செயற்கை நீங்கியபோது பால் இயற்கையான தித்திப்பையே உடையதாகும். அதுபோல, உயிருக்கு என்றும் உறவுப் பொருளாக இருப்பது திருவருள். அவ்வியல்புக்கு மாறாகத் திருவருள் பகைப் பொருளாக உயிர்க்குத் தோன்றுதல் அவ்வுயிரைப் பற்றியுள்ள ஆணவ மலமாகிய செயற்கையினால் ஆகும். அச்செயற்கை நீங்கியபோது, திருவருள் இயற்கையான உறவுப் பொருளாகவே தோன்றும். | |
| பதம் பிரித்து | உள்ளபடியே | |
|---|---|---|
| காண்பான் ஒளி இருளி்ல் காட்டிடவும் தான் கண்ட வீ்ண் பாவம் எந்நாள் விடும். | காண்பா னொளியிருளி்ற் காட்டிடவுந் தான்கண்ட வீ்ண்பாவ மெந்நாள் விடும். | |
| ம் தான்கண்ட வீண் பாவம் என்னாய் விடும்? பொருள் : ஒர | ||
| 22 | மாலு மயனும் வகுத்தளித்த வையமெலாஞ் சாலுமிதற் கப்பாலு மெப்பாலு - மேலை யுலகு முலகா லுணரவொண்ணா வூரு மிலகி நடக்குமெழி லாணையான் - அலகிறந்த நெஞ்சு விடு தூது > தசாங்கம்:- > 10. ஆணை > பாடல்: 22 | |
| 23 | காட்சியான் காட்சிக்குங் காணான் கலைஞான வாட்சியா னாட்சிக்கு மாயிலான் - சூட்சியான் பாரும் திசையும் படரொளியா லேநிறைந்தான் றூருந் தலையுமிலாத் தோன்றலான் - வேராகி வித்தாகி வித்தின் விளைவாகி மேவுதனுச் சத்தாதி பூதங்க டாமாகிச் - சுத்த வெறுவெளியாய்ப் பாழாய் வெறும்பாழுக் கப்பா லுறுபொருளாய் நின்ற வொருவன் - பொறியிலியேன் நெஞ்சு விடு தூது > இறைவன் பெருமை > பாடல்: 23 | 64 |